ஒரு
முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது
அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த
முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு
மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது.
அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது.
சிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை.
முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக