Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

12-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

 கேதுபகவான் தேய்பிறையின் கணுவாகும். ஜோதிடத்தில் நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறது. கேது மனித வாழ்விலும், படைப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக நம்பப்படுகிறது.

கேது பகவானிற்கு எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். மேலும் சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம் ஆகும். இவற்றின் நட்பு ராசிகள் மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகும். சமமான ராசி இல்லை. பகை ராசிகள் மேஷம், கடகம் மற்றும் சிம்மம் ஆகும்.

தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு-கேதுவை வணங்க தோஷங்கள் நீங்கும்.

லக்னத்திற்கு 12-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் தனிமையை விரும்புவார்கள்.

12ல் கேது இருந்தால் என்ன பலன்?

👉 ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

👉 பிரயாணங்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

👉 தாய்மாமன் வழியில் ஆதரவு இருக்கும்.

👉 சிலருக்கு கண்களில் பாதிப்பு உண்டாகும்.

👉 மனதில் எப்போதும் துன்பங்களை கொண்டவர்கள்.

👉 சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

👉 அலைபாயும் மனதை உடையவர்கள்.

👉 மன அமைதியின்றி இருக்கக்கூடியவர்கள்.

👉 வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்கள்.

👉 பூர்வீக சொத்துக்களால் ஆதாயமின்மை ஏற்படும்.

👉 அனைத்து மக்களுடனும் பழகக்கூடியவர்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக