Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!!
நடைமுறையில் ராகுவானவர் மேஷ ராசிக்கு மூன்றாம் இடத்திலும், கேது வானவர் ஒன்பதாமிடத்தில் இருக்கின்றனர். இனி நிகழ இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் ராகு கேது பெயர்ச்சியில் மேஷ ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் இரண்டாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது எட்டாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.

தனம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத வரவுகள் ஏற்பட்டாலும் அதிக முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். தேவையற்ற கோபங்களையும், வைராக்கிய எண்ணங்களையும் தவிர்ப்பது உங்கள் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும். இடது கண் தொடர்பான பார்வையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்களுடன் உரையாடும்போது முடிந்த அளவு வாக்குறுதிகள் கொடுப்பதை குறைத்து கொள்ளவும்.

பழக்கவழக்கங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு மறையும். புதிய நபர்களின் மூலம் வருமானங்கள் அதிகரிக்கும். ஆடம்பரமான உடைகள் மற்றும் பொருட்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தார்போல செயல்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்று மகிழ்வீர்கள். நெருங்கிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்தாலும் அவர்களின் மூலம் சில அலைச்சல்களும் உண்டாகும்.
பெண்களுக்கு :

எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகள் மற்றும் சிந்தனைகளால் செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு :

அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் நவீன தொழில்நுட்ப சார்ந்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் மற்றும் பொருளாதார உயர்வு உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த செயல்பாடுகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். உயரதிகாரிகளிடம் தங்கள் கருத்துக்களை பரிமாறும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
கணித நிபுணர்களுக்கு :

கணிதம் தொடர்பான துறையில் இருப்பவர்கள் புதிய நுட்ப சார்ந்த உதவிகளை கிடைக்கப் பெறுவீர்கள். வங்கித்துறையில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் பணத்தையும், கணக்கையும் கையாளவும்.
பொறியியல் வல்லுனர்களுக்கு :

பொறியியல் துறைகளில் இருப்பவர்களுக்கு அனுபவம் இல்லாத புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அறிமுகமும் உண்டாகும். ரசாயனம் சார்ந்த தொழில்நுட்ப துறையில் முன்னேற்றமும், பொருள் வரவும் மேம்படும்.
மருத்துவர்களுக்கு :

மருத்துவ துறைகளில், சித்த மற்றும் பாரம்பரிய துறைகளில் இருப்பவர்களுக்கு பொருள் வரவு மேம்படும். பிற மொழி பேசுபவர்களிடம் எதிர்பார்த்த ஆதரவும், மறைமுகமான எதிர்ப்பும் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். புதிய மருத்துவ முயற்சிகளில் பலவிதமான அலைச்சலுக்கு பின்பே எண்ணிய முடிவை கிடைக்கப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :

நறுமணப் பொருட்கள் விளைச்சலில் லாபமும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். தானியம் தொடர்பான விளைச்சல்களில் சற்று கவனம் வேண்டும். கனிமம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சி உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :

சிற்பம் தொடர்பான வேலைபாடுகளில் இருப்பவர்களுக்கு வியாபாரத்தில் தனிமதிப்பும், மரியாதையும் உண்டாகும். பூஜை பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் அதிக முதலீடுகள் மேற்கொள்வதில் கவனம் வேண்டும்.
வர்த்தகம் :

வர்த்தக தொடர்பான செயல்பாடுகளில் குறைந்த அளவு முதலீடுகள் நன்மையை அளிக்கும். தினசரி வர்த்தகத்திலும் மற்றும் பளப்பான பொருட்கள் தொடர்பான வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும்.
கலைஞர்களுக்கு :

கலைஞர்கள் உயர் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். திறமைக்கான அங்கீகாரம் காலம் கடந்து கிடைக்கும். எதிர்பாராத சில கசப்பான அனுபவங்களின் மூலம் மனப்பக்குவமும், முன்னேற்றத்திற்கான பாதைகள் அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அமையும்.
அரசியல்வாதிகளுக்கு :

பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கட்சிகளில் உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகளுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். தொண்டர்களின் மூலம் சில நேரங்களில் ஆதரவும், முரண்பாடான அனுபவங்களும் ஏற்பட்டு மறையும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் துர்க்கை அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபட தேக்க நிலைகள் யாவும் நீங்கி பொருள் வரவு மேம்படும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!!
அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக