>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 19 ஆகஸ்ட், 2020

    ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

    எந்த வேளையிலும் மகிழ்ச்சியுடன் மற்றும் புன்சிரிப்புடன் காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே...!!

    நடைமுறையில் ராகுவானவர் ரிஷப ராசிக்கு இரண்டாம் இடத்திலும் கேதுவானவர் எட்டாமிடத்திலும் இருக்கின்றனர். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் ரிஷப ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் ராசியிலும், ஞானத்திற்கு உரியவரான கேது ஏழாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.

    மனதில் புதுவிதவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் இருந்துவந்த தடைகள் அகலும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

    பெண்கள் :

    மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் மனத்தெளிவு கிடைக்கப் பெறுவீர்கள். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தந்தை வழியில் எதிர்பார்த்த தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதத்திற்கு பின்பே கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான செயல்கள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிற மொழிகள் சார்ந்த நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    மாணவர்கள் :

    தொழில் கல்வி சார்ந்த மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கெமிக்கல் தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக மாணவர்களின் மூலம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

    வியாபாரிகள் :

    பண்ணை தொழில் சார்ந்த முயற்சிகளில் லாபம் அதிகரிக்கும். அணிகலன் சார்ந்த வியாபாரம் செய்பவர்களுக்கு முதலீட்டிற்கு உண்டான லாபங்களும், அதற்கு மேற்பட்ட ஆதாயமும் கிடைக்கும். இணையம் சார்ந்த வர்த்தக வியாபாரத்தில் லாபங்கள் கிடைத்தாலும் சில சூழ்நிலைகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உத்தியோகஸ்தர்கள் :

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான முயற்சிகளை கையாளும் போது சில சங்கடங்களை உருவாக்கி கொள்வதற்கான சூழல் அமையலாம். ஆகவே எந்தவொரு செயலையும் செயல்படுத்துவதற்கு முன்பு அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து கொடுப்பதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பு மேம்படும். பலவிதமான அனுபவங்களின் மூலம் தெளிவான பொருளாதார முன்னேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

    கலைஞர்கள் :

    கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மூத்த அறிஞர்களின் உதவியால் புதிய நுட்பம் சார்ந்த செயல்பாடுகள் பற்றிய தெளிவு கிடைக்கும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில காரியங்கள் சாதகமாக முடியும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். தந்தைவழி உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். வாரிசுகளின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

    விவசாயிகள் :

    விவசாயத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். விவசாயத்தில் புதிய நுட்பமான முறைகளை பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பிற மொழி தொடர்பான விவசாய மாநாடுகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கு தொடர்பான காரியங்களில் கவனம் வேண்டும்.

    அரசியல்வாதிகள் :

    அரசியல்வாதிகள் அரசு தொடர்பான துறைகளில் உள்ள அதிகாரிகளுடன் கவனம் வேண்டும். கட்சி தொடர்பான பணிகளை அவ்வப்போது முடித்துக் கொள்வது நற்பெயரை ஏற்படுத்தும். மதம் தொடர்பான கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்படவும். கோவில் நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

    வழிபாடு :

    வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளை மலர்களை கொண்டு மாரியம்மனை வழிபாடு செய்து வர குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
    மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே...!!
    அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக