கலகலப்பும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை
மாற்றி கொள்ளக்கூடிய விகடகவிகளான மிதுன ராசி அன்பர்களே..!!
நடைமுறையில் ராகுவானவர் மிதுன
ராசியிலும், கேதுவானவர் ஏழாமிடத்திலும் இருக்கின்றார். இனி நிகழ இருக்கின்ற ஒன்றரை
ஆண்டு காலம் ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான
ராகுவானவர் பனிரெண்டாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது ஆறாம் இடத்திலும்
பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.
இளைய சகோதரர்களுடன் வெளியூர் பயணங்கள்
மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் மனதில் குழப்பமும்,
சஞ்சலமும் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டே இருக்கும். மனதிற்கு பிடித்த வாகனங்களை
வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தனிப்பட்ட எதிரிகளின் தன்மைகளையும், வாழ்க்கை
முறைகளையும் அறிந்து கொள்வீர்கள். உரையாடலின்போது உங்களின் தனித்துவமான சிந்தனைகள்
வெளிப்படும். மற்றவர்களிடத்தில் வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்வது மிகவும்
நன்மையாகும்.
மறைமுகமாக சில செயல்பாடுகளை அறிந்து
கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். முடியாது என நினைத்த சில காரியங்கள் முடித்து
வைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களிடம் ஆதாயமான பலன்கள் ஏற்பட்டாலும்
சில கசப்பான சூழ்நிலைகளும் நேரிடலாம். எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னால்
சிந்தித்து செயல்பட வேண்டும். முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதற்கான
வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமும், ஈடுபாடும்
அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு
:
கல்வி பயிலும் மாணவர்களுக்கு
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று கால தாமதமாக கிடைக்கும்.
விவசாயம் தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி
தொடர்பான கல்வியில் பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும்.
பெண்களுக்கு
:
மனதில் தோன்றும் ஆசைகளை நிறைவேற்றி
கொள்வதற்கான தைரியம் அதிகரிக்கும். ஆகவே, தோன்றும் எண்ணங்களை பெற்றோர்களிடம்
கலந்து ஆலோசித்து சீர் செய்து கொள்வது சில கசப்பான அனுபவங்களை தவிர்க்கும். விலை
உயர்ந்த பொருட்களின் மீதான ஆசைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீது
சில வதந்திகள் ஏற்பட்டாலும் ஒருவிதமான புரிதல் ற்றும் நன்மதிப்பு உருவாகும்.
ஒருவரை பற்றி மற்றவர் கூறும் கருத்துக்களில் அவர்மீதான கருத்துக்கள் உண்மையானதா?
என்பதை தெளிவுபடுத்திய பின்பு முடிவெடுப்பது நன்மையளிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி
நிமிர்த்தமான செயல்பாடுகளை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்க வேண்டும். பயணங்களை
மேற்கொள்ளும்போது கோப்புகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். சக ஊழியர்களால் ஆதரவான
பலன்கள் உண்டாகும். உயரதிகாரிகளால் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள்
கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சில செயல்பாடுகளை செய்வதற்கான
சூழ்நிலைகளும், உதவிகளும் அமையும்.
வங்கி
நிபுணர்களுக்கு :
பண வர்த்தகம் மற்றும் அறிமுகம் இல்லாத
புதிய நபர்களுக்கு கடன் உதவிகள் செய்யும்போது அவர்களிடம் இருந்து பெறப்படும்
கோப்புகள் சரியாக இருக்கின்றதா? என்று ஆய்வு செய்த பின்பு அவர்களுக்கு தேவையான
உதவிகளை அளிக்கவும்.
தணிக்கையாளர்களுக்கு
(ஆடிட்டர்) :
தணிக்கையாளர்களுக்கு எதிர்பார்த்த
புதிய ஒப்பந்தம், வெளியூர் தொடர்பான புதிய நிறுவனங்களின் அறிமுகம், பிற மொழி
பேசும் கலைஞர்களின் ஒத்துழைப்பு மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய
வாய்ப்புகளை கிடைக்கப்பெறுவீர்கள். நுணுக்கமான சில சூட்சமங்களை பற்றிய தெளிவான
சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு
:
வியாபாரத்தில் வேலையாட்களிடம் சில
இடங்களில் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நன்மையளிக்கும். எதிர்பாராத சில புதிய
ஒப்பந்தம் சாதகமாக அமையும். துறைசார்ந்த நிபுணர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு
அனுசரித்து செல்வது உங்களின் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும். எதிர்பாராத சில
லாபங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
விவாசாயிகளுக்கு
:
வித்தியாசமான அணுகுமுறையினால்
விவசாயத்தில் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் உண்டாகும். பாசனம்
தொடர்பாக இருந்துவந்த சில பிரச்சனைகள் பெரியவர்களின் ஆதரவால் அகலும். சேவல்
மற்றும் கொம்புள்ள மிருகங்களின் வளர்ப்புகளால் லாபங்கள் அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு
:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பிற
மதம் மற்றும் மொழி சார்ந்த நபர்களின் அறிமுகத்தால் மேன்மை உண்டாகும். புதிய
தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மூலம் உங்களின் மீதான மதிப்பினை உயர்த்தி
கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த சில வரவுகள்
கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு
:
அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்கள்
பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். எந்தவொரு செயலையும் செய்வதற்கு
முன்னால் அந்த செயல்களின் நன்மை, தீமைகளை அறிந்து அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம்
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையை ஏற்படுத்தும். கட்சி
நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். சில
பாரம்பரிய கோட்பாடுகளை மீறி செயல்படுவதற்கான வாய்ப்புகளில் நிதானத்துடன், சூழ்நிலைக்கு
ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.
வழிபாடு
:
வியாழக்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு
செய்து வர உத்தியோகம் நிமிர்த்தமான இன்னல்கள் குறைந்து மேன்மை உண்டாகும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும்
பொதுப்பலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக