ஒரு கிராமத்து ஆசிரமத்தில் பரமார்த்தர்
என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர். அவர்கள் யாவருமே அடி
முட்டாள்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள். ஒருநாள்
அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து
எடுத்து செல்வதற்கு உப்பு வாங்கி வருமாரு ஒரு சீடனை சந்தைக்கு அனுப்பினார்
பரமார்த்த குரு.
சீடனும் வழியில் ஆற்றை கடந்து
சந்தைக்குச் சென்று ஒரு கடையில் ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா? என்று கேட்டு
உப்பை வாங்கினார். கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை
உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும் என்றார்;. கோபமாக உப்பில் சுத்தமானது இருக்கிறது.
என் குரு எனக்கு கூறியிருக்கிறார்.
கடைக்காரர், ஐயா உங்கள் குரு அறிவாளி
நான்தான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் வேண்டுமானால் உப்பை கழுவி சுத்தம்
செய்துகொள்ளலாம் என்றார். இதைக்கேட்ட சீடன் இப்போதுதான் சரியாக பேசியுள்ளாய், இந்தாருங்கள்
பணம் என்று பணத்தை கொடுத்து விட்டு அவர் சொன்னதை நம்பி மகிழ்சியுடன் கிளம்பினான்.
போகும் வழியில் ஆற்றை கடந்து செல்லும் போது
சீடன், இந்த உப்பை அப்படியே எடுத்துச் சென்றால் குரு இது சுத்தமானதா என்று கேட்டு
கோபமடைவார். என்று நினைத்து ஆற்று நீரில் உப்பை துணியுடன் முக்கி எடுத்து தன்
தோலில் போட்டுக்கொண்டு சென்றான். போகிற வழியில் உப்பு முழுவதுமாக நீரில் கரைந்தது
அவனுக்கு தெரியவில்லை.
வீடும் வந்தது சீடன் வருவதைக் கண்ட
குரு வாவா ஏன் தாமதம் உப்பு வாங்கிவிட்டாயா? என்றார். ஆம் குருவே நீங்கள்
கூறியதுபோல் சுத்தமான உப்பு வாங்கிவந்தேன், என்று துணிபையை கொடுத்தான் சீடன். அதை
வாங்கி பார்த்த குரு என்னடா பை காலியாக உள்ளது எங்கேடா உப்பைக் காணோம் என்றார்.
குருவே உப்பு வாங்கும்போது
கடைக்காரனிடம் இது சுத்தமானதா என்று கேட்டப்பொழுது உப்பை நீரில் கழுவி சுத்தம் செய்யலாம்
என்றான். நானும் வருகிற வழியில் ஆற்று நீரில் உப்பை அலசி எடுத்து வந்தேன் என்றான்.
இதைக் கேட்ட குருவும் உன் யோசனை நல்ல யோசனைதான், ஆனால் உப்பு எங்கு போனது என்று
சமையலையும் மறந்துபோய் சிந்தனையில் ஆழ்ந்தனர் பரமார்த்த குருவும் சீடனும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக