லடாக்
எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம்
அடைந்தனர். அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச
நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.
இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வந்தது.
அதேபோல்
உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு
அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் என்றும் சில செயலிகள் மூலம்
இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு
எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா
சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான
தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்பட்டு வந்தது.
இந்த
நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு
தடை விதித்தது. இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக
இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில்
சீன செயலியான டிக்டாக்கில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனம் மதிப்பீடு செய்துவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக பைட்டான்ஸ் முகேஷ்
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளன.
வெளிவந்த
தகவலின் அடிப்படையில் டிக்டாக்கின் தலைமைச் செயல் அதிகாரியும் செயல்பாட்டு தலைவருமான
கெவின் ஏ மெயர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை
நடத்தியதாக தெரிகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், டிக்டாக்கின் உலகளவிய
மதிப்பு சுமார் 50பில்லியன் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் இந்திய மதிப்பு சுமார்
5பில்லியன் டாலர்(37408கோடி)அளவில் உள்ளது. இந்தியாவில் இருபது கோடி பயணர்கள் டிக்டாக்
பயன்படுத்தி வந்தனர்.
ரிலையன்ஸ்
நிறுவனத்தின் இணைப்பு மற்றம் கையப்படுத்துதல் குழு டிக்டாக் நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா
அல்லது ஓட்டுமொத்தமாக டிக்டாக்கை(இந்திய செயல்பாடு) வாங்கலாமா என்று மதிப்பீடு செய்து
வருகிறார்களாம். மேலும் இந்த வர்த்தக முதலீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த மாதம் துவங்கிவிட்டாலும்
இன்றும் எந்த முடிவுமே எட்டப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
சுருக்கமாக அமெரிக்காவிலும் டிக்டாக் தடைக்கான செயல் ஆனையில் டிரம்ப கையெழுத்திட்டுள்ள நிலையில் மைக்ரோசாப்ட் ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் டிக்டாக் செயலியை வாங்க திட்டமிடுவதாக தகவல் வெளியானது. அதைப்போலவே இந்தியாவிலும் டிக்டாக்கை ரிலையன்ஸ் வாங்க பேச்சுவார்தை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக