Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி?


நாம் தினமும் நமது சமையல்களில் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வதுண்டு. அந்த  வகையில், கத்தரிக்காயை பொறுத்தவரையில், இதனை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்வதுண்டு.
தற்போது இந்த  பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
  • கத்தரிக்காய் - கால் கிலோ
  • வெங்காயம் - 3
  • மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
  • கடுகு - கால் டீஸ்பூன்
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
  • தேங்காய் துருவல் - 1 கப்
செய்முறை
முதலில் தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு  காய்ந்ததும்,கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

அதன்பின் கத்தரிக்காயை போட வேண்டும். உப்பு, மிளகாய்தூள், மனல்தூள் சேர்த்து வதங்கி புளியை கெட்டியாக கரைத்து விட வேண்டும். நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காயாய் துருவலை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான  கத்தரிக்காய் பொரியல் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!