Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

பதிலுக்கு பதில்

ஒரு நாள் முல்லா தனக்கு ஒரு தலைப்பாகை வாங்குவதற்காக துணிக் கடைக்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையை கையில் எடுத்து விலை பேசியவுடன் அந்த தலைப்பாகையைத் தன் தலையில் அணிந்து கொண்டார்.

அதே கடையில் முல்லா அழகான சால்வைகள் இருப்பதைப் பார்த்தார். மேலும் இரண்டின் விலையும் ஒன்றாக இருப்பதால், முல்லா தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று நினைத்து அவர் கடைக்காரரைப் பார்த்து இந்தப் தலைப்பாகைக்குப் பதிலாக இந்த சால்வையை வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

கடைக்காரர், உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்க வில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத் தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா.

அப்படியானால் தலைப்பாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு நான் ஏன் பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேனே என்று கூறிவாறேக் கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார். கடைக்காரருக்கு என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக