ஒரு நாள் பரமார்த்தரின் படுக்கை அறை
தீப்பிடித்து எரிந்தது. அப்போது குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கியது அதைப்
பார்த்து சீடர்கள் ஐவரும் கவலைப்பட்டனர். குருதேவா! உங்கள் தாடி, இப்படிக்
ஆகிவிட்டதே என்று மட்டி அழுதான். இதற்காக கவலைப் படாதீர்கள். மீசை குறைந்தாலும்
வீரம் குறையாது. தாடி குறைந்தாலும் தொப்பை குறையாது, என்ற பழமொழி உங்களுக்குத்
தெரியாதா இதோ என் தொப்பையை பாருங்கள், என்றார், பரமார்த்தர். அதைக் கேட்டு
சீடர்கள் சிரித்தனர்.
குருவே! வயிற்று பசிக்கு என்ன செய்வது
என்று மடையன் கேட்டான் குருநாதா நேற்று அரசரின் பிறந்த நாள் விழாவில் உடல் ஊனம்
உள்ளவர்களுக்கு வேலை தருமாறு அறிவித்தார்கள் அதனால் நாங்கள் உடல் ஊனம் உள்ளவர்களாக
நடித்துச் சம்பாதித்து வருகிறோம், என்றான், முட்டாள். சரி, எல்லோரும் ஒன்றாகப்
போனால் சிக்கல் வரும். அதனால் தனித்தனியே போய் வாருங்கள். ஊமை மாதிரியும், செவிடு
மாதிரியும், குருடாகவும், நொண்டியாகவும் நடியுங்கள். மண்டு மட்டும் என்னுடன்
இருக்கட்டும், என்று கூறினார் குரு.
மட்டி வேலைகேட்டு படைத்தளபதியிடம்
சென்றான். நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை அரசரிடம் சொல்லி விட்டு வா, என்றார்,
தளபதி. செவிடனாக நடித்து மட்டி, என்ன புடலங்காயா நான் பார்த்தது இல்லையே என்றான்.
தளபதி மறுபடி ரகசியத்தைச் சொன்னார். ஓகோ மன்னருக்கு ஒரே ஒரு மூக்குதான் இருக்கிறதா
என்றான், மட்டி. இந்தச் செவிடனை வைத்துக் என்ன செய்வது என்று தளபதி புலம்பினார்.
அதைக் கேட்ட மட்டி கோபத்தில், யார் செவிடன் நீ தான் செவிடன் என்று திட்டினான்.
அதன் பின், மட்டியின் காதுகளில் என்று கட்டளையிட்டார் தளபதி.
அரசாங்க வைத்தியரிடம் போனான், மடையன். நான்
உங்களுக்கு உதவியாக இருக்கிறேன், என்று கூறினான். சரி சீக்கிரம் சில மூலிகைகளைப்
பறித்து வா, என்றார், வைத்தியர். மடையன் நிதானமாக எழுந்து, நொண்டி போல நடித்தான்.
அடப்பாவி பாம்பு கடித்த ஆளுக்குப் பச்சிலை பறித்து வரச் சொன்னால், இப்படி
நொண்டுகிறாயே என்று திட்டினார், வைத்தியர். மடையனுக்குக் கோபம் வந்து, யாரைப்
நொண்டி என்றாய் என்று தன் கால்களால் வைத்தியரை எட்டி உதைத்தான். தூர விழுந்த
வைத்தியர், என்னை ஏமாற்றிய இவனைத் தூணில் கட்டி வைத்து, சுற்றிலும் நூறு கழுதைகளை
அவிழ்த்து விடுங்கள். எல்லாம் சேர்ந்து இவனை உதைக்கட்டும் என்று ஆணையிட்டார்.
தலைமைப் புலவரிடம் போனான், முட்டாள். உன் வேலை
பழைய ஓலைகளில் எழுதி இருப்பதைப் படித்துச் சொல்வது என்றார் புலவர். அவர் ஓர்
ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதற்கு முட்டாள் கண் தெரியாதவனாக, கூஜா
கோணியுடன் அம்மன் ஆலயம் சென்றார், என்று படித்தான். அட முட்டாளே! ராஜா ராணியுடன்
அம்மன் ஆலயம் சென்றார், என்பதைத் தவறாக படிக்கிறாயே, உனக்கென்ன கண் குருடா? என்று
கேட்டார் புலவர். அதற்கு இரண்டு கண்ணையும் திறந்து காட்டினான், முட்டாள். என்னை
ஏமாறியதற்கு அவன் இரண்டு கண்களிலும் சூடு போடுங்கள் என்று உத்தரவிட்டார்.
மூடன், நேராக அரசனிடமே சென்று ஊமையாக நடிக்கலாம்
என்று பேசாமல் நின்றான் என்ன வேண்டும் என்று கேட்டான் மன்னன். மூடன், பெப் பெப் பே
, என்று ஊமை மாதிரி பேசினான். ஐயோ பாவம் ஊமை போலிருக்கிறது, என்றான் மன்னன்.
அதற்க்கு மூடன் பாவம் பார்த்தது போதும் மன்னா! எனக்கு வேலை கொடுங்கள், என்று
பேசினான். அவன் பேசுவதைக் கேட்டு, ஊமை மாதிரி நடித்து என்னை ஏமாற்றிய இவன் வாயைத்
தைத்து விடுங்கள் என்று கட்டளை இட்டான்.
மடத்தில் இருந்த குருவும், மண்டுவும் அந்த
நான்கு பேரும் வேலை முடிந்து, நிறைய பணத்துடன் திரும்பி வருவார்கள். அதனால்
பானையில் இருக்கும் பழைய சோற்றை நாய்க்குக் கொட்டி விடு! புதிய சோறாகவே பொங்கிச்
சாப்பிடலாம், என்றார்; பரமார்த்தகுரு . அவர் சொன்னதும் மண்டு சோற்றை வாரி
நாய்க்குக் கொட்டினான். அழுது புலம்பியவாறு வந்த சீடர்களைக் பார்த்தார்.
ஐயோ இருந்த பழைய சோற்றையும் நாய்க்குப்
போட்டு விட்டோம் இனி எதைச் சாப்பிடுவது என்று புலம்பி பின், பசியால் மயங்கி
விழுந்தார், பரமார்த்தர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக