Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 செப்டம்பர், 2020

பிரார்த்தனை

ஒரு தடவை முல்லா கடல் வழியாக கப்பலில் பிரயாணம் செய்துக் கொண்டிருக்கும்பொழுது திடீரென கப்பல் வழிமாறி சென்று விட்டதால் கரை என்பதே கண்ணுக்கு தெரியவில்லை. இருப்பினும் கப்பலின் பிரயாணம் செய்தவர்கள் தங்களிடம் இருந்த உணவும், குடிநீரும் தீரும் வரை கவலைப்படாமல் இருந்தனர். அவையனைத்தும் தீர்ந்து விட இனி நாம் உயிர்பிழைப்பது கடினம் என்று நினைத்து கொண்டு அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

இறைவனிடம் ஓவ்வொருவரும் உயிர் பிழைத்து விட்டால் ஒவ்வொரு பொருளை தானமாக தருவதாக வாக்களித்தனர். இதையெல்லாம் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா. திடீரென்று அவர் அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம் என்று கூவினார். பிரயாணிகள் கரை தெரிந்த சந்தோஷத்தில் சற்றுமுன் இறைவனுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் மறந்து விட்டார்கள். மேலும் சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிட்டு எப்படி நாம் வாழ்வது என்று பேசத் தொடங்கினார்கள்.

முல்லா கலகலவென சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்? என்று பிரயாணிகள் கேட்டனர். கரை கண்களுக்குத் தெரிவதாக நான் சொன்னது உண்மையல்ல என்றும், தான் ஒரு விளையாட்டுக்காக அவ்வாறு சொன்னேன் என்றார் முல்லா. முல்லா சொன்னது உண்மைதான் கடலின் நான்கு புறத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் கரை கண்களுக்கத் தெரியவில்லையே என்பதை அறிந்த பிரயாணிகள் அனைவரும் அழுகுரல் எழுப்பியவாறு மீண்டும் கடவுளைப் பிரார்த்தனை செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக