ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது ஆப்பிள் நிறுவனம். அதன்படி ஆப்பிள் நிறுவனம் அதிநவீன சிப்செட் மற்றும் மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற One More Thing நிகழ்வில் புதிய கம்ப்யூட்டிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இதில் அதிநவீன எம் 1 சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
அதன்படி புதிய எம்1 5நானோமீட்டர் முறையில் உருவான முதல் கம்ப்யூட்டிங் சிப் ஆகும். மேலும் இதில் 16 மில்லியன் டிரான்சிஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இது உலகின் மிகவும் அதிவேக கோர் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 8 கோர் சிபியு மற்றும் 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய பிராசஸருடன் இணைந்து செயல்பட ஏதுவாக மேக் ஒஎஸ் பிக் சர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது புதிய சிப்செட்-ஐ வழங்கும் செயல்திறனை சீராக இயக்க வழி செய்கிறது. பின்பு இதன் பயனர் தரவுகளை மற்ற கம்ப்யூட்டர்களை விட சிறப்பாக பாதுகாக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனுடன் அட்டகாசமான மேக்புக் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இது புதிய எம்1 சிப் கொண்டு வெளியான முதல் மேக் சாதனம் ஆகும். இந்த புதிய மேக்புக் ஏர் ஆனது முந்தைய மாடலை விட 3.5 மடங்கு சிறப்பான சிபியு மற்றும் 5 மடங்கு வேகமான ஜிபியு திறன் கொண்டுள்ளது.
மேக்புக் ஏர் மாடலில் 13.3-இன்ச் ரெட்னா டிஸ்பிளே, அதிகபட்சமாக 16 ஜிபி ரேம், 2 ஜிபி வரையிலான எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்பு தணடர்போல்ட்/யுஎஸ்பி 4, டச் ஐடி, வைபை 6, செக்யூட்டி என்கிளேவ் அம்சம், ஐபோன் மற்றும் ஐபேட் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக புதிய மேக்புக் ஏர் மாடல் துவக்க விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் எம்1 சிப் கொண்ட மேம்பட்ட மேக் மினி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. மேக் மினி மாடலில் 3 மடங்கு வேகமான சிபியு, 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆறு மடங்கு வேகமான கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் நியூரல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மேக் மினி மாடலின் கனெக்டிவிட்டியை பொருத்தவரை, யுஎஸ்பி 4 / தண்டர்போல்ட், ஹெச்டிஎம்ஐ 2.0, யுஎஸ்பி ஏ, ப்ரோ டிஸ்ப்ளே எக்ஸ்டிஆர் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய மேக் மினி மாடல் விலை 699 டாலர்கள் முதல் துவங்குகிறது.
அதேபோல் புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலும் புதிய எம்1 சிப் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு புதிய மேக்புக் ப்ரோ மாடலில் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 ஜிபி வரையிலான எஸ்எஸ்எடி வசதி, தண்டர்போல்ட் / யுஎஸ்பி 4, டச் ஐடி, வைபை 6 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலில் உளள பேட்டரி அதிகபட்சம் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு புதிய மேக்புக் ப்ரோ மேஜிக் கீபோர்டு, டச் பார், முன்பை விட 11 மடங்கு அதி வேகமான லெர்னிங் திறன் கொண்டுள்ளது. இந்த மேக்புக் ப்ரோ மாடலின் விலை 1299 டால்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக