ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இப்போது, ரியல்மி RMX2111 என்ற மாடல் எண் கொண்ட ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் தாய்லாந்தின் NBTC அதிகாரத்திடமிருந்து புதிய ஒப்புதல் பெற்றுள்ளது.
ரியல்மி வி 5 ஸ்மார்ட்போன்
ரியல்மி வி 5 என்ற ஸ்மார்ட்போன் மாடல் இந்த ஆண்டு ஆகஸ்டில் சீனாவில் அதே மாதிரியான RMX2111 என்ற மாடல் எண்ணை கொண்டு வெளிவந்தது. ரியல்மி 7 5ஜி உலகளாவிய சந்தையில் மறுபெயரிடப்பட்ட ரியல்மே வி 5 ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகப்படுத்தப்படலாம் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி இணைப்பு
வெளியாகியுள்ள புதிய சான்றிதழ் தகவலின் படி, புதிய ஸ்மார்ட்போன் மாடல் NBTC சாதனத்தின் மோனிகர் மற்றும் 5ஜி இணைப்பை ஆதரிக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. இது தவிர, வரவிருக்கும் ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் என்.பி.டி.சி சான்றிதழ் தவிர மற்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை இந்த போன் மறுவடிவமாக்கப்பட்ட மாடலாக இருப்பதால், ரியல்மி 7 5ஜி போலவே ரியல்மே வி 5 5ஜி போனும் இருக்கும்.
ட்ரிபிள் கேமரா அமைப்பு
ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன், 6.52' இன்ச் 1600 x 720 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேயுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 720 பிராசஸர் உடன் வருகிறது. 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.
18W ஃபாஸ்ட் சார்ஜிங்
ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் கேமரா கொடுக்கப்படும். இத்துடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஸ்மார்ட்போன் செயல்படும். இந்த போன் Android 10 OS உடன் பின்பக்க கைரேகை சென்சார் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக