அமேசான் இந்தியா வலைதளம் மற்றும் அமேசான் செயலி மூலமாக எச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்து பணம் செலுத்த முடியும். அமேசான் பே மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்தும்போது கூடுதல் சலுகையையும் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேசான் இந்தியா இந்துஸ்தான் பெட்ரோலியம்
அமேசான் இந்தியா இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்மூலம் எச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் அமேசான் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம்
அமேசான் இந்தியா வலைத்தளத்தின் மூலமாகவும், அமேசான் செயலியின் மூலமாகவும் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும். வாடிக்கையாளர்கள் அமேசான் பே பிரிவை கிளிக் செய்து கிரெடிட் கார்ட்கள், டெபிட் கார்ட்கள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
அமேசான் பே பிரிவு
அமேசான் பே பிரிவுக்குள் இருக்கும் எல்பிஜி தேர்வைக் கிளிக் செய்ய வேண்டும் அல்லது Pay Bills பிரிவைக் கிளிக் செய்ய வேண்டும் அதற்குள் இருக்கும் எச்பி கேஸ் தேர்வை கிளிக் செய்து முன்பதிவு செய்யலாம்.
உறுதிப்படுத்தும் விதமான எஸ்எம்எஸ்
அமேசான் மூலம் எச்பி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17 இலக்கு எல்பிஜி ஐடியை பதிவிட வேண்டும். முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தியவுடன் அதை உறுதிப்படுத்தும் விதமான எஸ்எம்எஸ் வரும்.
வாடிக்கையாளர்கள் ரூ.50 வரை திரும்பப் பெறலாம்
விநியோகஸ்கர்கள் விவரங்களை அமேசான் தளத்தில் காண்பிக்கப்படும். அதேபோல் அமேசான் பே மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்தும்போது வாடிக்கையாளர்கள் ரூ.50 வரை திரும்பப் பெறலாம் பெறலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.
எளிதாக சிலிண்டர் முன்பதிவு
அதேபோல் அமேசான் மூலம் எல்பிஜி கேஸ் புக் செய்பவர்கள் தங்களது உள்ளீட்டு விவரங்களை ஒரு மாதம் பதிவிட்டால் போதும் ஒவ்வொரு மாதமும் பதிவிட தேவையில்லை. வழக்கம்போலான மாதந்தோறுமான சிலிண்டர் முன்பதிவை எளிதாக மேற்கொள்ளலாம்.
அமேசான் இந்தியா ரயில் டிக்கெட் முன்பதிவு
சமீபத்தில் அமேசான் இந்தியா ரயில் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தியது. இது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (IRCTC) கூட்டு சேர்ந்து துவங்கப்பட்டது. இந்த அம்சம் தற்போது வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் மட்டுமே கிடைக்கிறது என்று அமேசான் தெரிவித்தது.
புதிய ரயில் டிக்கெட் சேவை
அமேசான் புதிய ரயில் டிக்கெட் சேவையுடன் ஜீரோ கட்டண நுழைவுவாயில் சேவை மற்றும் தளர்த்தப்பட்ட சேவை கட்டணங்கள் போன்ற அம்சங்களைக் பயனர்களுக்கு வழங்குகிறது. அமேசான் IRCTC டிக்கெட்களுடன் கேஷ்பேக் சலுகைகளையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக