பிராட்பேண்ட் இணைய சேவை நிறுவனமான (ISP), எக்சிடெல், சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மூன்று மாதங்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குகிறது. இந்த சலுகை திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் முதல் ஆறு மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக இலவச சேவையைப் பெறலாம். எக்சிடெல் (Excitel) நிறுவனம் இந்த சலுகையை #FullpeHalfFree (முழுபணம்பாதிப்ரீ) என்று பெயரிட்டுள்ளது. அதாவது நீங்கள் ஆறு மாதங்களுக்கு கட்டணத்தை மொத்தமாக செலுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஒன்பது மாதங்களுக்கு இணைய சேவையைப் பெறலாம்.
ஆனால் இந்த சலுகை நாட்டின் அனைத்து நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது. எக்சிடெல் தற்போது இதை நான்கு நகரங்களில் மட்டுமே வழங்கி வருகிறது. இந்த நான்கு நகரங்களில் டெல்லி-என்.சி.ஆர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் ஜான்சி ஆகியவை அடங்கும்.
தற்போது எக்ஸிடெல் மொத்தம் 13 நகரங்களில் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் குறைந்தது 100 எம்.பி.பி.எஸ் வேகத்தைப் பெறுவீர்கள். 100mbps முதல் 300mbps வரை என அதிவேக இணைய வேகத்தை வழங்குவதில் இந்த நிறுவனம் மிகவும் பிரபலமானது.
வாடிக்கையாளர்களுக்கு 1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் என வெவ்வேறு நாட்களுக்கான திட்டங்களை நிறுவனம் வழங்கி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில், ISP புதிய பயனர்களுக்கு 100 Mbps திட்டத்தை 4 மாதங்கள் மற்றும் 9 மாதங்களுக்கு வாங்குவதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது. பழைய வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை வாங்க முடியாது.
எக்ஸிடெல் தற்போது 13 நகரங்களில் 100 எம்.பி.பி.எஸ், 200 எம்.பி.பி.எஸ் மற்றும் 300 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவைகளை வழங்கி வருகிறது. நிறுவனத்தின் 300 எம்.பி.பி.எஸ் திட்டம் ஆன்லைன் கேம்களை விளையாடுவதில் ஆர்வமுள்ள பயனர்களுக்கானது. எக்சிடெல் தனது சேவைகளை 2021 இறுதிக்குள் இந்தியாவில் 50 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக