எனக்கு இரண்டு மூளை.. கால்கள் கிடையாது.. ஒரு உயிர்.. என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்ற தோரணையில் பேஸ்புக்கில் ஒரு பதிவு மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது. சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவரும் இந்த புகைப்படத்தில் ஒரு பாம்பு இரண்டு தலையுடன் ஒட்டி பிறந்திருப்பதைக் காட்டுகிறது. இந்த பாம்பிற்கு ஏன் இரண்டு தலைகள் உள்ளது? இது எப்படிச் சாத்தியமானது என்ற அறிவியல் உண்மையை இப்போ தெரிந்துகொள்ளலாம்.
பூனை பிடித்து கொடுத்த இரண்டு தலை பாம்பு
புளோரிடாவின் பாம் ஹார்பர் பகுதியில் வசிக்கும் ஒரு வீட்டு பூனை தான் இந்த இரண்டு தலை பாம்பைக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய இரண்டு தலை ரேசர் பாம்பை, அந்த பூனை வீட்டின் பரணிலிருந்து கண்டுபிடித்துள்ளது. பரணில் இருந்து இந்த இரண்டு தலை பாம்பை பிடித்த பூனை, உரிமையாளரின் முன்னணியில் நடு வீட்டில் போட்டுவிட்டது. நடு வீட்டில் பாம்பை பார்த்த உரிமையாளர் பதரிபோய்விட்டார்.
அரிய வகை இரண்டு தலை பாம்பு
பாம்பை உற்றுக்கவனித்த உரிமையாளர் அதற்கு இரண்டு தலைகள் இருப்பதை உணர்ந்து, அதைப் பத்திரமாகப் பிடித்து பாதுகாப்பாகப் பெட்டியில் வைத்து அடைந்துள்ளார். இந்த அரிய வகை இரண்டு தலை பாம்பை அவர் புகைப்படம் எடுத்து பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு ஒரே நாளில் வைரல் ஆகியது. இந்த அறிய வகை பாம்பை அவர் வளர்க்கவும் முடிவு செய்திருக்கிறார்.
டோஸ் என்ற பெயருக்கு காரணம்
ஒரே உடலில் இரண்டு தலைகளுடன் ஒட்டி பிறந்த சிறிய பாம்பிற்கு, தனித்தனியாகத் தலைகள், கண்கள் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. இரண்டு தலை பாம்பின் கழுத்து மற்றும் நாக்கு சுயாதீனமாக நகர்த்தக்கூடியதாக இருந்துள்ளது. பாம்பை வளர்க்க முடிவு செய்த குடும்பம் அதற்கு "டோஸ்" என்று பெயரிட்டது. டோஸ் என்றால் ஸ்பானிஷில் "இரண்டு" என்று அர்த்தம்.
பைஸ்ஃபாலி (bicephaly) என்றால் என்ன? அறிவியல் உண்மை இதுதான்
பாம்பின் இந்த நிலை பைஸ்ஃபாலி (bicephaly) என அழைக்கப்படுகிறது. இது கரு வளர்ச்சியின் போது நிகழும் ஒரு அசாதாரண நிகழ்வாகும். மனிதர்களில் ஒரே மாதிரியான இரட்டையர்கள் முழுமையாக பிரிக்கத் தவறும் போது இப்படியான நிகழ்வு நிகழ்கிறது. இப்படியான நிகழ்வு மனிதன் மட்டுமின்றி மான் மற்றும் மீன்கள் உட்படப் பல வகையான விலங்குகளிலும் இதற்கு முன்பு தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டை பூர்த்தி செய்த டோஸ்
2018 ஆம் ஆண்டில் வர்ஜீனியாவில் உள்ள ஒரு குடும்பம் இரண்டு தலை கொண்ட வைப்பர் ஸ்னேக் பாம்பைக் கண்டுபிடித்தது, அதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில் நியூஜெர்சியில் "டபுள்-டேவ்" என்ற பெயரில் ஒரு பைஸ்ஃபாலிக் ராட்டில்ஸ்னேக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்பொழுது இந்த ஆண்டுக் கணக்கை நிறைவேற்றி வைக்கும் விதத்தில் ''டோஸ்'' 2020 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது சற்று வேடிக்கையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பாக மற்ற விலங்குகளுடன் சேர்ந்த இரட்டை தலை பாம்பு
பைசெபலிக் விலங்குகள் காடுகளில் இயல்பாக வாழ்வது என்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது, இரையைப் பிடிப்பது, பிற வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிப்பது என்பது இவைகளுக்கு கடினமான வாழ்க்கையை உருவாக்குகிறது. எனவே, இவை பெரும்பாலும் வனவிலங்கு நிபுணர்களின் பாதுகாப்பில் தான் வளர்க்கப்படுகிறது. இப்போதைக்கு, டோஸை புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் (எஃப்.டபிள்யூ.சி) கவனித்து வருகிறது
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக