சரி, நாமெல்லாம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களானோம் என்பதை கடைசியாக ஒருமுறை நம்பிக்கொள்ளுங்கள்.
ஏனெனில் மனித இனம் மட்டுமின்றி இதர அனைத்துமே எப்படி.? எங்கு.? எந்த காலகட்டத்தில் உருவானது.? அதற்கு காரணமாய் இருந்தது என்ன.? பூமி கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினம் எது.? அதை சாத்தியப்படுத்தியது என்ன.? அது சாத்தியமாகாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும்.? என்பதையெல்லாம் நீங்கள் அறிந்த பின்னர் மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்று வாசகத்தை நீங்கள் பயன்படுத்த தயங்குவீர்கள்.
உலகின் முதல் உயிரினம் எது.?
பேரண்டங்களின் இடையே நாம் வாழும் இந்த பூமி கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினம் (மிருகங்களை) பற்றிய மிகவும் மர்மமான ஆய்வொன்றில் விஞ்ஞானிகள் தேவையான பதில்களை அடைந்துள்ளனர்.
பழமையான வண்டல் பாறை
இந்த வெற்றியானது மனிதர்கள் இல்லாத எந்தக் கிரகத்திற்கும் ஒரு முக்கிய தருணமாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) தலைமையிலான ஆய்வாளர்கள், மத்திய ஆஸ்திரேலியாவில் இருந்து கைப்பற்றப்பட்ட பழமையான வண்டல் பாறைகளை ஆய்வு செய்துள்ளனர்.
தூள் தூளாக நொறுக்கி
அந்த ஆய்வில் இருந்து சுமார் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்களின் வளர்ச்சி (ஆல்கே) தொடங்கி உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற பாறைகளை தூள் தூளாக நொறுக்கி அதிலிருந்து பழங்கால உயிரினங்களின் மூலக்கூறுகளை பிரித்தெடுத்த்தின் விளைவாய் இந்த விளக்கத்தை நாம் பெற்றுள்ளோம்.
சுற்றுச்சூழல் புரட்சி
இந்த மூலக்கூறுகள், சுமார் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் சுவாரசியமானதாக இருந்ததை நமக்குத் தெரிவிக்கிறது. அதுவொரு சுற்றுச்சூழல் புரட்சியாக இருந்துள்ளது. அது பாசிகளின் எழுச்சியாக இருந்துள்ளது" என்று ஆராய்ச்சி தலைமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிகள் வளர்ச்சி
இந்த பாசிகள் வளர்ச்சிதான் பூமியின் வரலாற்றில் மிக ஆழமான சுற்றுச்சூழல் புரட்சிகளை உண்டாக்கியுள்ளது. ஒருவேளை இது நடக்காமல் போயிருந்தால் மனிதர்களும், பிற விலங்குகளும் உருவாகாமல் போயிருக்கும் என்றும் ஆய்வறிக்கை விளக்கமளிக்கிறது.
ஸ்னோபால் பூமி நிகழ்வு
இதெல்லாம் நடப்பதற்கு முன்பு அதாவது 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்னோபால் பூமி என அழைக்கப்பட்ட ஒரு வியத்தகு நிகழ்வு நடைபெற்ற்றுள்ளது. அதாவது பூமி சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து நிலையில் இருந்துள்ளது. அதாவது பெரும் பனிக்கட்டிகளிலான, முழு அளவிலான மலைத்தொடர் நிலப்பரப்புகளை கொண்டிருந்துள்ளது.
சமுத்திரங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது
அதன் பின்னர் உருவான ஒரு தீவிர உலகளாவிய வெப்பமானது பனிகளை உருக செய்துள்ளது. அந்த நிகழ்வின் வாயிலாக ஆறுகளில் இருந்த ஊட்டச்சத்துகள் சமுத்திரங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் உருவான மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உலகளாவிய வெப்பநிலைகளானது பாசிகள் விரைவான பரவலுக்கு சரியான நிலைமைகளை உருவாக்கியுள்ளது.
ஆரம்பமாய் இருந்துள்ளன
உணவு வலையின் அடிப்பகுதியில் உள்ள இந்த பெரிய மற்றும் சத்துள்ள உயிரினங்கள் சிக்கலான சுற்றுச்சூழல் பரிணாம வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கியுள்ளன. மனிதர்கள் உட்பட பெரிய மற்றும் சிக்கலான விலங்குகள் பெருமளவில் பூமியில் செழித்து வளர ஆரம்பமாய் இருந்துள்ளன.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக