சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அதன் கஸ்டம் மேட் UI OneUI பயன்முறையைப் பல பொது பீட்டா தளங்களில் கிடைக்கும்படி செய்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற சந்தைகளில் கிடைக்கும் கேலக்ஸி எஸ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இந்த UI OneUI ஏற்கனவே பீட்டா திட்டத்தில் கிடைக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.0 ROM சேவையையும் நிறுவனம் சோதித்தும் வருகிறது.
அமெரிக்க சந்தையில் உள்ள கேலக்ஸி நோட் 20 யூனிட்டுகள் ஒன் யுஐ 3.0 உடன் பீட்டா உருவாக்கத்தையும் பெற்றுள்ள குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மலேசிய இணையப் பக்கத்தில் ஒரு புதிய தகவல் தற்பொழுது நேரலைக்கு வந்துள்ளது. வெளியான தகவலின்படி, சாம்சங் நிறுவனம் பல புதிய மேஜர் மாற்றங்களையும் UI 3.0 சேவையையும் சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய வலைப்பக்கத்தில் வெளியான பட்டியலிலிருந்து நமக்கு கிடைத்துள்ள முக்கிய செய்தி என்னவென்றால், ஒன் யுஐ 3.0 நவம்பர் மாதத்தில் ஸ்டேபிள் பில்ட் ரோல்அவுட் தேதியை எதிர்நோக்குகிறது என்பது தான். இருப்பினும் இந்த அப்டேட் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் அணுகக் கிடைக்கும், எந்தெந்த பகுதிகளில் எல்லாம் இது கிடைக்கக்கூடும் என்பது பற்றிய தகவல்களை சாம்சங் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
தற்போதைய பீட்டா தகவலை வைத்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி எஸ் 20 "குடும்ப" வரிசையானது இந்த அப்டேட்டை பெறும் முதல் "நபர்களாக" இருக்கலாம் என்று தெரிகிறது. மலேசிய வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட், புதிய இசட் ஃபோல்ட் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் போன்ற சாம்சங்கின் பல சாதனங்களில் இந்த அப்டேட் மிகவும் பரந்த அளவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய இன்டர்பேஸ்கள் க்விக் பேனலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு 11 மல்டிமீடியா கண்ட்ரோல்களை கொண்டது, இது மல்டிமீடியா சோர்ஸ் மற்றும் கண்ட்ரோல் இடையே சுவிட்ச் செய்ய அனுமதிக்கிறது. ஒன் யுஐ 3.0 டைனமிக் லாக் ஸ்கிரீனில் அதன் செயல்திறனை 10 மடங்கு அதிகரிக்கிறது. போல்ட் 2 ஸ்மார்ட்போன் three-way display splitting மல்டி-ஆக்டிவ் விண்டோவுடன் பல மாற்றங்களைப் பெறும் என்று தெரிகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக