Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 நவம்பர், 2020

ஐபிஎல் கிரிக்கெட் பெயரில் மக்களின் உணர்வோடு விளையாடுகிறார்கள்: நீதிபதிகள் காட்டம்

 ஐபிஎல் 2020 - போட்டி அட்டவணை நாளை வெளியீடு || Schedule of IPL 2020 will be  released tomorrow

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர்.


Play games தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், dream level விளையாட்டில் கிரிக்கெட்டிற்காக விளம்பரம் கொடுப்பவர்களை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர் என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், "கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா? IPL கிரிக்கெட் அணிகளில் மாநிலத்தில் உள்ள ஊர்களின் பெயரை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதனை பயன்படுத்தவில்லையெனில் யாரும் கிரிக்கெட்டை பார்க்கமாட்டார்கள்.

இது முற்றிலுமாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, அவர்களை தவறாக வழிகாட்டி, மக்களை மேட்ச் பார்க்க வைக்கின்றனர். மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள்" என தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக