பண்டிகை காலங்களில் இந்தியன் ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஆனால் பயணிகள் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் (Confirm Ticket) பெறுவது கடினமாக உள்ளது.
சிறப்பு ரயில்களில் உள்ள நீண்ட காத்திருப்பு பட்டியல்கள் (Waiting list) பல பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
இந்தியன் ரயில்வேயின் (Indian Railway) படி, தற்போது இயங்கும் 327 ரயில்களில் காத்திருப்புப் பட்டியல் உள்ளது.
இருப்பினும், இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க இந்தியன் ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. காத்திருப்பு பட்டியலில் உள்ள சிக்கலை முடிவுக்குக் கொண்டுவர டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் முழுமையாக ஆராய்ந்து வருவதாக அறியப்படுகிறது. காத்திருப்பு பட்டியல் அதிகபட்சமாக இருக்கும் பிஸியான பாதைகளில் அதிக ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. தரவுகளை ஆராய்ந்த பின்னர் இந்தியன் ரயில்வே இந்த வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை இயக்கக்கூடும்.
காத்திருக்கும் பயணிகளின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தியன் ரயில்வே பிஸியான பாதைகளில் குளோன் ரயில்களை இயக்கக்கூடும்.
குளோன் ரயில் என்றால் என்ன?
அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணிக்கும் ஒரு ரயிலின் அதே எண்ணுடன் இயக்கப்படும் மற்றொரு ரயில் குளோன் ரயில் (Clone Trains) எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, புது தில்லி-திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரசின் அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. மேலும் நீண்ட waiting list-ம் உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில், இந்தியன் ரயில்வே அதே ரயிலின் மற்றொரு ரேக்கை அதே எண்ணுடன் இயக்கும். இதில் waiting list-ல் உள்ள பயணிகளுக்கு confirm ticket கிடைக்கும்.
முதல் அசல் ரயிலுக்கான ரெசர்வேஷன் சார்ட் தயாரான பிறகு, அதன் குளோண் ரயிலில் தங்களுக்கான சீட் மற்றும் பர்த்துக்கான தகவல்கள் காத்திருபுப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்.
குளோன் ரயில்களை இயக்குவதற்கு கூடுதல் ரேக்குகள் தேவைப்படும் என்பதால் இது இந்தியன் ரயில்வேக்கு முன் ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஆரம்பத்தில் முக்கிய நகரங்களிலிருந்து இந்த குளோன் ரயில்களை இயக்க ரயில்வே முயற்சிக்கும் என்று தெரிகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக