Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 நவம்பர், 2020

ரூ.400-விலையில் தரமான சார்ஜரை அறிமுகம் செய்த சியோமி.!

திய சார்ஜர் ஐபோன் 11 மற்றும் ஐபோன் எஸ்இ (

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 12 2 சீரிஸுடன் இணைந்து செயல்படக்கூடிய 20வாட் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜரை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த புத்தம் புதிய சார்ஜர் ஐபோன் 11 மற்றும் ஐபோன் எஸ்இ (2020) உள்ளிட்ட பழைய ஐபோன் மாடல்களுடன் இணக்கமாக இருக்கும். மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களின் ரீடெயில் பாக்ஸிலிருந்து இன்-பாக்ஸ் யுஎஸ்பி அடாப்டரை அகற்றுவதற்கான முடிவை அறிவித்த சில நாட்களில் சியோமி நிறுவனம் இந்த புதிய நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட யுஎஸ்பி டைப்-சி சார்ஜரை தவிர, சியோமி நிறுவனம் மி பவர் பேங்க் 3 Pikachu எடிஷனை முழுமையான மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனத்தின் 20வாட் யுஎஸ்பி டைப்-சி சார்ஜர் இந்திய மதிப்பின்படி ரூ.400-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மி பவர் பேங்க் 3 பிகாச்சு எடிஷன் தோராயமாக ரூ.1,100-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜர் அம்சங்கள்

சியோமி 20வாட் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜர் ஆனது ஐபோன் 11 பேட்டரியின் 45 சதவீதத்தை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்வாதக் கூறப்படுகிறது. மேலும் இந்த சார்ஜர் 100-240 வி வைட் வோல்டேஜ் மின்னழுத்தத்தையும் ஆதரிக்கறது. பின்பு ஐபாட் மற்றும் நிண்டெண்டோ சுவிட்ச் உள்ளிட்ட சாதனங்களுடனும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி நிறுவனத்தின் இந்த புதிய சார்ஜரில் கூடுதலாக ஒரு மேம்பட்ட சர்க்யூட் மற்றும் சிப்பை வழங்கியுள்ளது, இது ஷாக்ஸ் மற்றும் ஓவர்கரெண்ட் போன்ற சம்பவங்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் சியோமி 20W யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜர் ஆனது 38x22.2x43 மிமீ மற்றும் 43.8 கிராம் எடையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாரம்பரிய 5வாட் அடாப்டரைப் போலன்றி இந்த 20வாட் யுஎஸ்பி டைப்-சி சார்ஜர் பல்வேறு சாதனங்களில் பாஸ்ட் சார்ஜிங் அனுபவத்தை வழங்க பல்வேறு பாஸ்ட் சார்ஜிங் நெறிமுறைகளுடன் இணக்கமானது.

மி பவர் பேங்க் 3 பிகாச்சு எடிஷன் அம்சங்கள்

அதேபோல் மி பவர் பேங்க் 3 பிகாச்சு எடிஷன் ஆனது 10000எம்ஏஎச் லித்தியம் அயன் பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் இது 18வாட் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பின்பு இந்த பவர் பேங்க் இரண்டு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்களுடன் வருகிறது, அவை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம்.

ஆனாலும் ஒரு போர்ட் தான் 18வாட் பாஸ்ட் சார்ஜிங்னை வழங்குகிறது. வியரிபிள்ஸ் உள்ளிட்ட லோ பவர் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான ஆதரவும் இதில் உள்ளது. பவர்பேங்கை சார்ஜ் செய்ய மைக்ரோ யுஎஸ்பி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்களை சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது.


மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டை, பாஸ்ட் சார்ஜ் செய்ய 18வாட் அடாப்டருடன் பயன்படுத்தலாம். இது பவர் பேங்கை நான்கு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்யும் என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது. அதன்பின்பு பவர் பேங்கின் அளவைப் பற்றிய விவரங்களை வழங்குவதற்காக மேலே எல்.ஈ.டி இன்டிகேட்டர்களையும் சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், போகிமொன் ரசிகர்களை ஈர்க்க மேலே ஒரு பிகாச்சு பிராண்டிங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்த்ககது.

குறிப்பாக இந்த சாதனத்தில் உள்ள advanced circuitry மூலம் பயனர்களுக்கு பாதுகாப்பான சார்ஜிங் அனுபவத்தை வழங்குவதாகக் கூறுகிறது சியோமி நிறுவனம்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக