வங்கிக் கணக்கை குளோஸ் செய்வதற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராதம் இல்லாமல் குளோஸ் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.
வங்கிகளில் திறக்கப்படும் கணக்குகளைப் பல்வேறு
காரணங்களுக்காக பயனாளர்கள் குளோஸ் செய்கிறார்கள். பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை
செய்பவர்கள் சம்பளம் பெறுவதற்கு ஒரு வங்கிக் கணக்கைத் திறந்துவிட்டு அந்த
நிறுவனத்திலிருந்து மாறி வேறு நிறுவனத்துக்குச் சென்றாலும் புதிய கணக்கைத் திறப்பார்கள்.
பழைய கணக்கில் எவ்விதப் பரிவர்த்தனைகளும் இல்லாமல் இருந்தால் அந்தக் கணக்கு சாதாரண
சேமிப்புக் கணக்காக மாற்றப்படுகிறது. ஆனால் அதற்கு அபராதம் விதிக்கப்படும்.
ஒவ்வொரு வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் மாறுபடுவதால் அபராதத் தொகையும் வங்கிக்கு
வங்கி மாறுபடுகிறது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஒரு வங்கிக் கணக்கில் 12 மாதங்களுக்குத்
தொடர்ச்சியாக எவ்விதப் பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தால் அந்தக் கணக்கு
செயல்படாத கணக்காக கருதப்படுகிறது. ஒருவேளை 24 மாதங்களாக எவ்விதப்
பரிவர்த்தனைகளும் இல்லாமல் இருந்தால் அந்தக் கணக்கு டார்மண்ட் அக்கவுண்ட்டாக
கருதப்படுகிறது. எனவே பழைய கணக்கை குளோஸ் செய்வது அவசியமாகும். ஒவ்வொரு மாதமும்
மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத காரணத்துக்காக குறிப்பிட்ட தொகை அபராதமாக
வசூலிக்கப்படும்.
நீங்கள் உங்களது வங்கிக் கணக்கை தொடங்கிய 14 நாட்களில் குளோஸ் செய்துவிட்டால்
அதற்கு அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது. அதேபோல கணக்கு தொடங்கப்பட்டு ஒரு வருடம்
கழித்து அந்தக் கணக்கை குளோஸ் செய்தால் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல்
தப்பிக்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகளில் ஒரு வருடம்
கழித்து வங்கிக் கணக்கை குளோஸ் செய்தால் அபராதம் வசூலிப்பதில்லை. இதற்கு முன்னர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இதற்கு 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில், நீங்கள் உங்களது வங்கிக் கணக்கை குளோஸ் செய்வதாக இருந்தால் 14
நாட்களுக்கு உள்ளோ அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகோ குளோஸ் செய்தால் கூடுதல்
கட்டணம் செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்.
14 நாட்களுக்குப் பிறகு ஒரு வருடத்துக்குள் குளோஸ் செய்தால் அபராதம் செலுத்த
வேண்டும். வங்கிக் கணக்கை திறக்கும்போது வழங்கப்படும் செக் புக், ஏடிஎம் கார்டு
போன்றவற்றுக்கான செலவுகளைச் சரிசெய்வதற்கே இதுபோன்ற அபராதங்கள் வசூலிக்கப்படுவதாக
வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. வாடிக்கையாளரிடம் வங்கிக் கணக்கை குளோஸ்
செய்வதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எவ்வித
விதிமுறையையும் விதிக்கவில்லை. இது முழுவதும் வங்கிகளின் முடிவைப் பொறுத்தது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் அறிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக