Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

மாதம் வெறும் ரூ.125 விலையில் 12 'OTT சந்தா' வாங்கலாமா? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பாரதி ஏர்டெல் வழங்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் திட்டங்கள்

கடந்த சில வருடங்களில் OTT சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற சில முக்கிய OTT சேனல்களின் சேவையைப் பெற அதிக ஆர்வம் காட்டுவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட இந்த OTT சேனல்களுக்கான சந்தாக்களை அதன் பிரீமியம் திட்டங்களுடன் சேர்த்து வழங்கத் துவங்கின. இதனால், இப்போது இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் பயன்படுத்தும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

பாரதி ஏர்டெல் வழங்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் திட்டங்கள்

இதேபோல், மற்ற OTT நன்மைகளையும் பெற மக்கள் இப்போது ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இதனை அறிந்த பாரதி ஏர்டெல் நிறுவனம், அதன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையுடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் என்பது பாரதி ஏர்டெல் உருவாக்கிய ஓவர்-தி-டாப் (OTT) பிளாட்ஃபார்ம் மற்றும் டெல்கோவின் பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் சேவையுடன் வழங்கப்படும் ஒரு சேவையாகும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவைக்கென்று நிறுவனம் தனியாகச் செயலியையும் வைத்துள்ளது. இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் உள்ள உள்ளடக்கத்தை அணுக அனுமதிக்கிறது.

12 OTT சேனலுக்கான அணுகலை பெறத் தயாரா?

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயனர்கள் SonyLIV, Lionsgate Play சேனல் போன்ற பல தனித்த இயங்குதளங்களின் சந்தாக்களை வாங்கி பயன்ப்பெற முடியும். அல்லது நீங்கள் உங்களுக்குப் பிடித்த OTT சேனல்களின் சந்தாவைக் கூடுதல் கட்டணம் செலுத்தி தனித்தனியாக அந்நிறுவனத்திடம் இருந்தே வாங்கி பயன்பெறலாம். ஆனால், அதிக கட்டணம் செலுத்தாமல் சாமர்த்தியமாக 12 OTT சேனலுக்கான அணுகலை பெற விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக Airtel Xstream Premium திட்டத்திற்குத் தான் செல்ல வேண்டும்.

12 OTT தளங்களுக்கான சந்தாவா? அப்போ விலை அதிகமா?

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பற்றித் தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டமானது டாடா ஸ்கை பிங்கே போன்ற தொகுக்கப்பட்ட OTT சேவையாகும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்துடன், பயனர்கள் இப்போது 12 வெவ்வேறு உள்ளடக்க OTT தளங்களுக்கான அணுகலைப் பெறுகின்றனர். 12 OTT தளங்களுக்கான சந்தாவை வழங்கும் ஒரு திட்டம் என்றால் இதன் விலை மிகவும் அதிகமாக இருக்குமே என்று நீங்கள் நினைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது நீங்கள் நினைப்பதை விட மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்ட விலை மற்றும் அம்சங்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் ஆதாரங்களின்படி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டம் இரண்டு வெவ்வேறு விலைகளில் வருகிறது. ஒன்று, பயனர்கள் மாதாந்திர விருப்பத்திற்குச் செல்லலாம், அதற்கு வெறும் ரூ. 149 என்ற கட்டணத்தைச் செலுத்தினால் மட்டும் போதும். அல்லது, அடுத்தபடியாக நிறுவனம் வழங்கும் வருடாந்தர விருப்பத்திற்குச் செல்லலாம். இது உங்களுக்கு வெறும் ரூ. 1499 என்ற விலையில் கிடைக்கிறது. சாமர்த்தியமாக நீங்கள் வருடாந்திரத் திட்டத்தைத் தேர்வு செய்தால், உங்களின் மாதச் செலவு வெறும் ரூ.125 ஆக மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் கீழ் கிடைக்கும் 12 OTT சந்தாக்களின் பட்டியல்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தின் மூலம், பயனர்கள் பின்வரும் உள்ளடக்க தளங்களுக்கான அணுகலைப் பெறுகிறார்கள். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மூலம் கிடைக்கும் OTT சேனல்களின் விபரங்களை இப்போது பார்க்கலாம். ஈரோஸ் நவ் (Eros Now), சோனி லைவ் (SonyLIV), ஹோய்ச்சோய் (Hoichoi), ஷெமரூமீ (ShemarooMe), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), அல்ட்ரா (Ultra), எபிக் ஆன் (EpicON), மனோரமா மேக்ஸ் (Manorama Max), டிவோ (Divo), டோலிவுட் பிளே (Dollywood Play), கிளிக் (KLIKK) மற்றும் நம்மஃபிலிக்ஸ் (NammaFlix) போன்ற OTT தளங்களுக்கான அணுக்களை வழங்குகிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டாண்ட் அலோன் திட்டங்கள்

இந்த தளங்களில் பெரும்பாலானவை மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும், பிரீமியம் சந்தாவின் விலையும் மிக அதிகமாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வழங்கும் தொகுக்கப்பட்ட சந்தாவை வாங்குவதற்கு உங்களுக்கு விரும்பவில்லை என்றால், இந்த தளங்களுக்கான தனித்தனி சந்தாவைப் பெறவும் உங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அனுமதி வழங்குகிறது. இதை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டாண்ட் அலோன் திட்டங்கள் என்று குறிப்பிடுகிறது.

தனித்தனியாக இந்த OTT சந்தாவை வாங்கினால் எவ்வளவு செலவாகும்?

இதன் படி, பயனர்களுக்கு அதன் இயங்குதளங்களில் கிடைக்கும் OTT தளங்களின் பட்டியலை வைத்து அவர்களுக்குத் தேவைப்படும் தளங்களுக்கான சந்தாவை மட்டும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தை வாங்குவது சிக்கனமானது என்பதால், நீங்கள் இதைத் தேர்வு செய்வது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும். உதாரணமாக, SonyLIV இன் மாதாந்திர கட்டணம் ரூ. 299 ஆகும். அதே சமயம் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தில் மாதம் வெறும் ரூ. 149 இல் கிடைக்கிறது, இதில் SonyLIV சேவையும் அடங்கும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா மட்டும் போதும் என்றால் என்ன செய்வது?

லயன்ஸ்கேட் ப்ளேயின் தனித்த சந்தா செலவு கூட மாதத்திற்கு ரூ 149 ஆகும். அதே சமயம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தில் பயனர்கள் அதே ரூ 149 செலுத்தி மேலும் பல தளங்களுக்குச் சந்தாவைப் பெறலாம். இந்த திட்டம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்களும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் திட்டங்களைத் தேர்வு செய்து ஒட்டுமொத்தமாக 12 OTT சேவைகளின் சந்தாவைப் பெற்று மகிழ்ந்திருங்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் போன்ற OTT சேவைகளின் சந்தாவைப் பெற நீங்கள் ஏர்டெல்லின் சாதாரண ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் தேர்வு செய்தாலே போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக