அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்-க்கு சொந்தமாக சுமார் 430 மில்லியன் யூரோ மதிப்புள்ள படகு ஒன்று இருக்கிறது. இந்த படகானது பிராமாண்ட கட்டமைப்போடு பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டது. இந்த படகு நெதர்லாந்தை கடந்த பயணிக்க வேண்டும் என்றால் ரோட்டர்டாமர்ஸ் டி ஹெஃப் பாலத்தை கடக்க வேண்டும். இந்த பாலமானது படகின் அளவை விட சிறியதாக இருக்கிறது. இந்த படகின் உயரம் 130 அடி என கூறப்படுகிறது. படகு இப்படியே கடந்தால் பாலத்தில் இடிக்கும் சூழல் இருக்கிறது.
இந்த பாலமானது 1878 ஆண்டு கட்டத் தொடங்கியதாவகும் அப்போதைய சூழல் காரணமாக இந்த பாலத்தின் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 1940 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்துக் கொண்டிருந்த போது நாஜிக்கள் குண்டு வீசியதன் காரணமாக இந்த பாலம் மேலும் சேதமடைந்தது. இந்த நிலையில் மக்கள் சேவைக்கு பாலம் பிரதான தேவையாக இருந்த காரணத்தால் பாலம் மீண்டும் கட்டமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த பாலத்தை கடக்க படகு கடக்க வேண்டுமானால் பாலத்தை இடிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஒருவரின் சூப்பர் படகை பயணிக்க வைக்க ஒரு வரலாற்றுப் பாலத்தை இடிப்பது என்பது எந்த வரம்பிற்கும் அப்பாற்பட்டது என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பாலத்தை இடித்தால் மட்டும் படகு நகர முடியும் என்ற சூழல் மறுபுறம் இருக்கிறது. பாலத்தை இடிப்பதற்கு உள்ளூர் வாசிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
படகு கட்டுமானத்திற்கு ஆன செலவுகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு படகு பாலத்தை தாண்டி செல்லும் வகையில் பாலத்தை இடிக்க மேலர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த படகு செல்வதற்கு ஏதுவான அளவில் மட்டுமே பாலத்தை இடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 130 அடி உயரம் உள்ள இந்த படகு கடந்து செல்லும் அளவிற்கு மட்டுமே இந்த பாலத்தின் பகுதியை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இடிக்கப்படும் பாலத்தை மறுசீரமைக்க சில வாரங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கிறது. படகு செல்லும் அளவில் மட்டுமே பாலம் அகற்றப்படும் எனவும் இந்த பாலத்தை மீண்டும் மறுசீரமைத்து கட்டிக் கொடுக்கும் செலவை அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்றுக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோட்டர்டாமுக்கு அருகில் உள்ள அல்ப்லாசெர்டாமில் இருக்கும் மூன்று மாஸ்டட் மெகாயாட்சை கப்பல் கட்டும் தளம் படகை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக பாலத்தை அகற்றும்படி கேட்டுக் கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க பாலத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. இதற்கு ஆகும் செலவை பெசோஸ் ஏற்றுக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு கடலுக்கு கொண்டு செல்வதற்கு ஒரே வழி இதுதான். படகு கடந்து செல்வதற்கு ஏதுவான இடவசதியை வழங்கும் வகையில் பிரமாண்டமான ஸ்டீல் கர்டர் பாலத்தின் நடுப்பகுதியை மட்டுமே அகற்றப்படும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. 1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் இதை புத்தகம் விற்பனை மையமாகவே தொடங்கினார். உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்ணிகளில் ஒன்றாக இருப்பது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக