Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

இதை எதிர்பார்க்கல- கெத்து காட்டும் பிஎஸ்என்எல்., 12.9 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ: ஏர்டெல், விஐ நிலை என்ன?

12.9 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ

ஜியோ டிசம்பர் மாதம் 12.9 மில்லியன் பயனர்களை இழந்து இருப்பதாகவும் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பயனர்களை இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.9 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ

ஜியோ டிசம்பர் மாதம் 12.9 மில்லியன் பயனர்களை இழந்து இருப்பதாகவும் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பயனர்களை இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் பயனர்கள் குறைந்ததன் காரணம் குறித்து பார்க்கையில், நிறுவனம் செயலற்ற சந்தாதாரர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அதனுடன் ப்ரீபெய்ட் கட்டண உயர்வுகள் குறைந்த வருமானம் கொண்ட பயனர்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு செல்ல தூண்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் பயனர்கள் அதிகரிப்பு

2021 டிசம்பரில் ரிலையன்ஸ் ஜியோ 12.9 மில்லியன் சந்தாதாரர்களை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே மாதத்தில் பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) 1.1 மில்லியன் பயனர்களையும், பாரதி ஏர்டெல் 0.47 மில்லியன் பயனர்களையும் இணைத்துள்ளது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தரவு தெரிவிக்கிறது. வோடபோன் ஐடியா (விஐ) டிசம்பர் மாதத்தில் மேலும் 1.6 மில்லியன் பயனர்களை இழந்தது.

ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்த்தி அறிவிப்பு

சமீபத்தில் ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறைந்த ஊதியம் பெற்று இந்த விலையில் ரீசார்ஜ் செய்ய முடியாத ஜியோ, விஐ மற்றும் ஏர்டெல் சந்தாதாரர்கள் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு மாறி இருக்கலாம் என கூறப்படுகிறது. சந்தைப் பங்கை குறித்து பார்க்கையில், ரிலையன்ஸ் ஜியோ 36%, பாரதி ஏர்டெல் 30.81%, வோடபோன் ஐடியா 23%, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் முறையே 9.90% மற்றும் 0.28% ஆக கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ வெகுவான சந்தாதாரர்களை இழந்திருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் பயனர்கள் குறைந்ததன் காரணம்

ரிலையன்ஸ் ஜியோவின் பயனர்கள் குறைந்ததன் காரணம் குறித்து பார்க்கையில், நிறுவனம் செயலற்ற சந்தாதாரர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அதனுடன் ப்ரீபெய்ட் கட்டண உயர்வுகள் குறைந்த வருமானம் கொண்ட பயனர்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு செல்ல தூண்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ தற்போது வோடபோன் ஐடியாவை விட சிறந்த விஎல்ஆர் சதவீதம் அதாவது செயலில் உள்ள சந்தாதாரர்களின் சதவீதத்தை கொண்டிருக்கிறது. இதன் சதவீதம் குறித்து பார்க்கையில், ஏர்டெல் 98.01% பயனர்களுடன் முன்னணியில் இருக்கிறது. அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ 87.64% மற்றும் வோடபோன் ஐடியா 86.42% உடன் இருக்கிறது. இந்த மாதத்தில் பிஎஸ்என்எல் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 50.32% செயலில் இருக்கிறது. ஜியோ 364.34 மில்லியன் செயலில் உள்ள பயனர்களுடன் ஒப்பிடும் போது ஏர்டெல் 348.69 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது.

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகள்

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஒப்போ நிறுவனம் புதிய மொபைல் போன்களில் 5ஜி பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த பரிசோதனைகளை ரிலையன்ஸ் ஜியோ உடன் சேர்ந்து நடத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஒப்போ. அதாவது ஒப்போவின்
புதிய தயாரிப்பான ஒப்போ ரெனோ வரிசை ஸ்மார்ட்போன்களில் 5ஜி சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் 5ஜி இணையத்தை தாங்கும் வகையில் உருவான ரெனோ 7 வரிசை ஸ்மார்ட்போனில் 4கே வரையிலான வீடியோவை தடையின்றி பார்க்கவும்,மிக வேகமாக அப்லோட் மற்றும் டவுன்லோட்கள் நடைபெறுவதாக ஒப்போ நிறுவனம்தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் வரும் 5ஜி சேவை

தற்போது இந்தியாவில் இருக்கும் 4ஜி இணையத்தை விட கூடுதலான வேகத்தில் இயங்கும் 5ஜி இணையம் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக 5ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, குருகிராம், சண்டிகர், பெங்களூர் உள்ளிட்ட சில நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சோதனை தளங்களை நிறுவியுள்ளது. இந்தியாவில் ஏராளமான 5ஜி இயக்கப்பட்ட போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், நிலையான 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்வதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. ஆனால் ரிலையன் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் 5ஜி சோதனை நடத்த தொலைத் தொடர்புத் துறை முன்னதாக அனுமதி வழங்கிவிட்டது. தொலைத்தொடர்பு துறை பல்வேறு நிறுவனங்களுக்கு சோதனை அலைக்கற்றையை ஒதுக்கி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக