Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

அட்டகாச அம்சம் அறிமுகம்- இனி உங்கள் மொபைலை பிளிப்கார்ட் மூலம் விற்கலாம்: இவுங்களே விற்கிறாங்க., வாங்குறாங்க!

ஸ்மார்ட்போன் விற்க விரும்பினால் சிறந்த தளம்

இனி நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் விற்க விரும்பினால் சிறந்த தளம்

பயன்படுத்திய பொருட்களை விற்பதற்கு பிரபலமான தளமாக இருப்பது ஓஎல்எக்ஸ், க்விக்கர் போன்றவை ஆகும். இப்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் விற்க விரும்பினால் இப்போது பிளிப்கார்ட்டை அணுகலாம். பிளிப்கார்ட் ஆன்லைன் தளம் மூலமாக ஸ்மார்ட்போன்களை விற்க விரும்புபவர்கள் புதிய செல்பேக் திட்டத்தை அணுகலாம். அதேபோல் இந்தத் திட்டத்தின் கீழ், பைபேக் மதிப்பு பிளிப்கார்ட் எல்க்ட்ரானிக் பரிசு வவுச்சர் வடிவில் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஆனது முன்னதாகவே நாடு முழுவதும் உள்ள 1700 ஜிப் குறியீடுகளில் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பிரபல இ-காமர்ஸ் தளம் வெளியிட்டுள்ள தகவல்

இதுகுறித்து பிரபல இ-காமர்ஸ் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த செல்பேக் திட்டம் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பிளிப்கார்ட் மூலம் Cellback என்ற திட்டத்தின் கீழ் செல்போன்களை விற்கலாம். தற்போது ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்கப்பட்டாலும், விரைவில் அதாவது இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிற சாதனங்கள் விற்பதற்கான அணுகலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. ஆனால் ஸ்மார்ட்போன் விற்பதற்கான அணுகலை பிளிப்கார்ட் இப்போதே தொடங்கியுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ் ரீ-காமர்ஸ் தளமான யந்த்ரா

எலெக்ட்ரானிக்ஸ் ரீ-காமர்ஸ் தளமான யந்த்ராவை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் இந்தியாவில் அதன் பயனர்களுக்கு மீண்டும் விற்பனை திட்டத்தை தொடங்கியுள்ளது. இ-வேஸ்ட் எலெக்ட்ரானிக் வேஸ்ட் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த திட்டம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. பயன்படுத்திய பொருட்களை விற்கவும், வருமானத்திற்கு ஏற்ப சாதனங்களை வாங்கவும் பயனர்களுக்கு இது உதவும். ஆனால் இது கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இதில் போன்களை விற்றால் காசு கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காசு கிடைப்பதற்கு பதிலாக பிளிப்கார்ட் மூலம் பிற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

125 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில்

இந்தியாவில் சுமார் 125 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சுமார் 85% குப்பைத் தொட்டிகளில் செல்கிறது என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழலில் மின்னணு கழிவுகள் அதிகரித்து வருகின்றன. பிளிப்கார்ட் செல்பேக் திட்டம் இந்த சிக்கலை தீர்க்க நம்பகமான தளமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இதில் தயாரிப்புகளை விற்பதன் மூலம் சிறந்த பைபேக் மதிப்பை பெற அனுமதிக்கும்.

பிளிப்கார்ட் செல்பேக் திட்டம்

பிளிப்கார்ட் செல்பேக் திட்டத்தின் மூலம் உங்கள் சாதனத்தை எப்படி விற்பனை செய்வது என்ற விவரங்களை பார்க்கலாம். நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை விற்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். பிளிப்கார்ட் செல்பேக் திட்டத்தில் மொபைலை விற்பதற்கான வழிமுறைகளை பார்க்காலம்.

  • முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் Flipkart பயன்பாட்டைத் திறக்கவும்
  • மெனு பட்டியல் சென்று அங்குள்ள செல் பேக் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பின் செல் பேக் பக்கம் காட்டப்படும்.
  • செயல்பாடுகளைத் தொடங்க "செல் இப்போது" என்ற தேர்வை கிளிக் செய்யவும்.
  • பிராண்ட் பெயர் மற்றும் IMEI எண் போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.
  • உங்கள் இருப்பிடத்தை உள்ளிட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்
பிளிப்கார்ட் கிஃப்ட் வவுச்சரை வழங்கும்

இந்த தேர்வு அனைத்தையும் கிளிக் செய்து அனைத்தும் முடிந்த பிறகு. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் மதிப்பை பார்க்கலாம். இதை பார்த்த 48 மணி நேரத்திற்குள் பிளிப்கார்ட் நிர்வாகி ஒருவர் உங்களிடம் வந்து உங்களது ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்வார். இந்த சரிபார்ப்பு முடிந்த சில மணிநேரங்களில் பிளிப்கார்ட் கிஃப்ட் வவுச்சரை பெறுவார்கள். இந்த வவுச்சரை பயன்படுத்தி பிளிப்கார்ட் மூலம் எந்த பொருட்களையும் வாங்கலாம். பயன்படுத்தாத போன்களை விற்று பரிசு வவுச்சர்களை பெறுவதற்கு பிளிப்கார்ட் சிறந்த வாய்ப்பாக இருக்கும். பரிசு வவுச்சர்களை பெற்று பிளிப்கார்ட்டில் அந்த விலைக்கேற்ப உங்கள் விருப்பமான பொருட்களை வாங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக