Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில் சிருங்கேரி கர்நாடகா

Sharadambika Temple : Sharadambika Sharadambika Temple Details |  Sharadambika- Sringeri | Tamilnadu Temple | சாரதாம்பாள்

இந்த கோயில் எங்கு உள்ளது?

கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி என்னும் ஊரில் அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சிக்மகளூர்  மாவட்டத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள சிருங்கேரி என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

துங்கா ஆற்றின் அருகே சாரதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிக லிங்கமாக விளங்கும் சந்திரமௌலீஸ்வரரையும், ரத்தின கர்ப்ப கணபதியையும் முதல் பீடாதிபதி சுரேஸ்வரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார்.

இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள்.

ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.

வேறென்ன சிறப்பு?

ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் சிருங்கேரியில் தர்பார் தரிசனம் காண்பது சிறப்பு. இந்த தரிசனத்தின் போது பஞ்சாங்கம் வாசித்து, நான்கு வேதங்கள் ஓதி, மேளதாளங்கள் ஒலிக்க தேவிக்கு தீபாராதனை நடக்கும்.

சாரதாதேவியின் இடதுபக்கம் தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் தரிசனத்தின் போது பொன்னாடை போர்த்தி, தலையில் கிரீடம் வைத்து, கழுத்தில் விலை உயர்ந்த நகைகள், கையில் ருத்ராட்ச மாலை, விரல்களில் பெரிய மோதிரங்களுடன் அம்மனின் பிரதிநிதியாக பீடாதிபதி அமர்ந்து தரிசனம் தருவார்.

மடத்தின் காவல் தெய்வங்கள் கிழக்கே-காலபைரவர், மேற்கே-அனுமன், வடக்கே-காளி, தெற்கே-துர்க்கை கோயில் அமைந்துள்ளது. சாரதாதேவி பெரிய ராஜகோபுரத்துடன் தனி கோயிலில் அருளுகிறாள்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வரும் வைகாசி சுக்ல பஞ்சமியில் 5 நாள் சங்கர ஜெயந்தி, வியாசர் பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாபா விரதம், உமாமகேஸ்வர விரதம், மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

சாரதாதேவியை வேண்டினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்முன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யலாம். இங்கு தினமும் லலிதா சகஸ்ரநாமம் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக