Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

டென்ஷனை மறந்து சிரிக்க... நீங்க ரெடியா? படிங்க... சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
--------------------------------------------------------------
பாபு : நீங்க பாடிக்கிட்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடிச்சானே... அப்புறமும் ஏன் தொடர்ந்து பாடுறீங்க?
கோபு : ஒரு செருப்ப வெச்சிக்கிட்டு நான் என்ன பண்றது?
பாபு : 😆😆
--------------------------------------------------------------
ராமு : எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபி, அவன் இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
சோமு : அவன் ஜெராக்ஸ் கடை வெச்சிருக்கான்.
ராமு : 😜😜
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
--------------------------------------------------------------
உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்...!

உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்.

மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகம்...!

இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு, இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது.

ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்...!

இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்.

அரசியல்வாதியின் கல்லறையில்...!

தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது.

ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்...!

இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்.
--------------------------------------------------------------
நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்...!!
--------------------------------------------------------------
காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்... காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா!
 
இது என்ன நியாயம்? 

கலகலவென சிரித்தார் இறைவன்...

தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை,

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை,

தூணிலும் இருக்கிறேன்... துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை,

ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை,

எனக்கான இடத்தை,

எனக்கான நேரத்தை,

எனக்கான விழாக்களை,

என்னை வணங்கும் முறையை,

எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்...!

இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு 

என்னையே கேட்பது என்ன நியாயம் என்றார்?

யோசிங்க...🤔🤔
--------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக