Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

மிகவும் அரிதான கண்டுபிடிப்பு: நியூசிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பேய் சுறா மீன்.! ட்விட்டரில் வைரல்

 பேய் சுறா மீன்கள் -சிமேரா என்று

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக இருக்கிறது கூறவேண்டும். இந்நிலையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு என்றுதான் கூறவேண்டும். மேலும் இது பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நியூசிலாந்து விஞ்ஞானிகள் மிகவும் அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக இது சிறிய மீன்வகை என்றும், ஆழ் கடலில் மட்டுமே வாழக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இதை தென் தீவுக்கு அருகே, சுமார் 1.2 கி.மீ ஆழ்கடலில் கண்டுபிடித்து உள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த பேய் சுறா மீன்கள் -சிமேரா என்று அழைக்கப்படும் எனவும், இது மிகவும் அரிதாகவே காணப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அவற்றின் குட்டிகளை பார்ப்பது இன்னும் அரிதானது.

தற்போது இளம் பருவ நிலையில் கிடைத்துள்ள பேய் சுறா மீன் ஆனது வெள்ளை வால் மற்றும் கருப்பு கண்கள், கருப்பு துடுப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் இந்த வகையான மீன் குட்டிகளின் இளம் பருவ நிலையை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதாவது ஆழ்கடல் மீன்கள் எண்ணிக்கையை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போது தான் தற்செயலாக இந்த மீன் எங்களுக்கு கிடைத்தது என பிபிசி செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார் இந்த மீனை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் பிரிட் ஃபினுச்சி.

குறிப்பாக ஆழ்கடல் உயிரினங்களை கண்டு பிடிப்பது மிகவும் கடினம் என்றும், அதிலும் இந்த பேய் சுறா மீன கண்டுபிடிப்பதுஎன்பது அரிதானது என அந்த ஆராய்ச்சியாளர் கூறினார்.

மேலும் நியூசிலாந்தை தளமாகக் கொண்ட தேசிய நீர் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இதுபற்றிகூறுகையில், இப்போது கிடைத்துள்ள இந்த இளம் பருவ மீன் சமீபத்தில்தான் முட்டையில் இருந்த வெளிவந்திருக்கும் எனவும்,

கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீனின் வயிற்று பகுதியில் முட்டையின் ஓடுகள் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். பின்புஇந்த வகையான மீன் பற்றி ஆராய்ச்சி செய்வது மூலம் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று கூறினார்.

குறிப்பாக இந்த மீன் இளம்பருவத்தில் வித்தியாசமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. எனவே தான் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோல் இந்த மீன் பலதரப்பட்ட சுழுலிலும் வாழக்கூடியது எனவும், பல வகை உணவுகளை எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த அரிய வகை பேய் சுறா மீனின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் ட்விட்டர் தளத்தில் இந்த மீனை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு பல்வேறு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக