Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

ஐடி நிறுவனங்களின் முடிவால் ஐடி ஊழியர்கள் அச்சம்.. விரைவில் பணிநீக்கம் வருமா..?!

  ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி துறை கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த அதிகப்படியான வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்து வரும் அதிகப்படியான திட்டங்கள் மட்டுமே காரணமாக உள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் கிடைத்து வரும் காரணத்தால் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்டு அதிகரித்த வேளையில் சக போட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஈர்க்க துவங்கியது இதனால் ஐடி நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் உச்சத்தைத் தொட்டு உள்ளது.

இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ள முடிவு ஏற்கனவே இத்துறையில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குப் புதிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

ஐடி நிறுவனங்கள்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களிடம் அதிகப்படியான ப்ரெஜெக்ட் கிடைத்துள்ள நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க 3 மாதங்களுக்கு முன்பில் இருந்து அளவுக்கு அதிகமான பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க துவங்கியது.

பிரஷ்ஷர்கள் சம்பளம்

குறிப்பாகப் பிரஷ்ஷர்களுக்கு டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்கள் 3 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டிய இடத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமாகச் சம்பளத்தைக் கொடுக்கத் துவங்கியது. பல ஆண்டுகளுக்குப் பின்பு பிரஷ்ஷர்களுக்கான சம்பளத்தை உயர்த்த டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ முடிவு செய்துள்ளது.

30 சதவீதம் அதிகம்

இந்நிலையில் தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த ஆண்டை விடவும் சுமார் 30 சதவீதம் அதிகப் பிரஷ்ஷர்களை 2022ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூன் மாதத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக டீம்லீஸ் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

புதிய தொழில்நுட்பங்கள்

இதுமட்டும் அல்லாமல் ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்களை டேட்டா அனலிட்டிக்ஸ், பிக் டேட்டோ, சைபர் செக்யூரிட்டி என அனைத்து புதிய தொழில்நுட்பத்திலும் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது, இதனால் அனைத்து துறையிலும் பிரஷ்ஷர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர உள்ளது. இங்கு தான் பிரச்சனை துவங்குகிறது...

அதிக ஊழியர், அதிகச் சம்பளம்

ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான ஊழியர்களை, அதிகளவிலான சம்பளத்தைக் கொடுத்துப் பணியில் அமர்த்தியுள்ளது. இந்த நிலையில் பிரஷ்ஷர்களின் நியமனமும் அதிகமாக உள்ளது. அடுத்த 2 அல்லது 3 வருடத்தில் ஐடி நிறுவனங்கள் பெறும் புதிய வர்த்தகத்தின் அளவுகள் குறையும் பட்சத்தில் நிர்வாகத்தில் நெருக்கடி உருவாகும்.

பிரம்மிட் அமைப்பு

இத்தகைய காலகட்டத்தில் ஐடி நிறுவனங்கள் தனது பிரம்மிட் அமைப்பைக் கட்டாயம் சரி செய்ய வேண்டிய நிலை உருவானால் அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது தவிர வேறு வழி ஐடி நிறுவனங்களுக்கு இருக்காது.

டாட் காம் பபுள்

இதற்கிடையில் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தால் டெக் துறையில் அடுத்த ஒரு வருடத்தில் டாட் காம் பபுள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய ஐடி துறையில் எதிர்பார்க்கப்படும் பணிநீக்கம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சம்

இதனால் தற்போது பெரும் ஐடி சேவை நிறுவனத்தில் அதிகம் சம்பளத்துடன் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவரும் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர் என்றால் மிகையில்லை. ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்ப்பதே செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை மறக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக