Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 பிப்ரவரி, 2022

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்க்

யூடியூபர் ஒருவர் டிஐஒய் திறன்களை சோதனைக்கு உட்படுத்தி ஒரே நேரத்தில் 5000 போன்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்ட 27 மில்லியன் எம்ஏஎச் போர்ட்டபிள் சார்ஜரை உருவாக்கியுள்ளார். உலகின் மிகப்பெரிய பவர் பேங்க்-ன் முழு விவரங்களை பார்க்கலாம். ஹேண்டி ஹெங்க் தனது நண்பர்கள் பயன்படுத்திய பவர்பேங்கை விட மிகச் சிறிய பவர் பேங்கை பயன்படுத்தி வந்துள்ளார். இதுவே அவரை ஒரு பெரிய பவர் பேங்கை தயாரிக்கும் எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்க்

ஒரு பவர் பேங்கின் தன்மையே இதை எங்கு வேண்டுமானாலும் கையில் எடுத்துச் சென்று பயணிக்கலாம் என்பது தான். ஆனால் ஹேண்டி ஹெங்க் உருவாக்கிய 27,000,000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது மிகப் பெரிய அளவில் இருக்கிறது. சீன எலெக்ட்ரானிக்ஸ் ஹேண்டி ஹெங்க், சமீபத்தில் வெய்போ மற்றும் யூடியூப் கணக்குகளில் "I Made a 27,000,000 mAh Portable Power Bank" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவேற்றினார். இவர் உலகின் மிகப்பெரிய பவர் பேங்கை உருவாக்கியுள்ளார். உலகின் அதிக ஆற்றல் வழங்கும் பவர் பேங்கை அவர் உருவாக்கி இருக்கிறார்.

அடித்தளத்தில் இருந்து கட்டமைப்பு

இந்த பவர்பேங்க் அடித்தளத்தில் இருந்து கட்டப்பட்டது. ஒவ்வொரு இணைப்பாக ஒருங்கிணைத்து வயரிங் துல்லியமாக செய்யப்பட்டுள்ளது. ஒரு பவர்பேங்க்கிற்கு தேவையான அனைத்தும் அடிதளத்தில் இருந்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பவர்பேங்க் ஆனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற முக்கிய பொருட்களுக்கு சக்தி அளிக்கிறது. இதில் 220 வோல்ட் வரையிலான மின் ஆற்றல் 60 அவுட்புட் சார்ஜிங் போர்ட்டல் உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

மிகப் பெரிய பவர் பேங்க்
மிகப் பெரிய பவர் பேங்க்

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய பவர் பேங்க் ஆனது 5.9 அடி x 3.9 அடி நீளம் மற்றும் அகலம் கொண்டிருக்கிறது. இதை கையில் எடுத்துச் செல்ல முடியாது என்றாலும் இதை இடம் மாற்றுவதற்கு பவர் பேங்க் அடியில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த பவர் பேங்க் ஆனது பாரிய வடிவில் அதாவது நம் கையில் பயன்படுத்தும் பவர்பேங்க் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்ப்ளே உடன் டிவி, வாஷிங் மெஷின்

ஒரு பவர் பேங்க் தன்மையே அதை தேவைப்படும் இடத்தில் கையில் எடுத்துச் செல்வது தான். ஆனால் இந்த பவர் பேங்கை சிறிதளவு நகர்த்துவதே மிகக் கடினமாக இருக்கிறது. இருப்பினும் தங்கள் பகுதியில் வசிக்கும் பல்வேறு நபர்களுக்கு இந்த பவர் பேங்க் பயனுள்ளதாக இருக்கும் என இதை உருவாக்கியவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆற்றங்கரையில் மீன் பிடிக்கும் போது பெரிய டிஸ்ப்ளே உடன் டிவி பார்க்கவும், வாஷிங் மெஷினை இயக்கவும் ஹெங் அதை பயன்படுத்துகிறார். ஹெண்டி ஹெங்க் இதுபோன்ற கண்டுபிடிப்புகளை செய்வது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பவர் பேங்க் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்கள்
பவர் பேங்க் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்கள்

பவர் பேங்க் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்கள் சமீப காலமாக அன்றாட பயன்பாடாக மாறி வருகிறது. தொலைதூரம் பயணிக்கும் போதும், மின்சாரம் கிடைக்காத போதும் பெரிதளவு கைக் கொடுப்பது பவர் பேங்க் தான். பல சமயங்களில் போதுமான அளவுடன் பவர் பேங்க் நமக்கு பயன்படுவதில்லை. இந்த நிலையில் சீன யூடியூப் நட்சத்திரமான ஹேண்டி ஹெங்க் என்பவர் 27 மில்லியன் எம்ஏஎச் மான்ஸ்ட்ரோசிட்டியை உருவாக்கினார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஃபோன்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும் வாஷிங் மெஷின், டிவி போன்ற உபகரணங்களையும் சார்ஜ் செய்யலாம் என கணிக்கப்படுகிறது.

மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி
மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி

ஹேண்டி கெங்க் எனும் பெயர் கொண்ட டிஐஒய் கைவினைஞர் தனது வெல்டிங் திறன்களை பயன்படுத்தி எம்ஐ பவர் பேங்க் போன்று தோற்றமளிக்கும் சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது ஒரு மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி போல் இருக்கிறது. இந்த பவர் பேங்கில் 60 பவர் சாக்கெட்டுகள் இருக்கிறது. இது பெரிய அளவில் இருக்கிறது. இது இழுப்பதற்கு ஏதுவாக கீழே சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.  

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக