Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 பிப்ரவரி, 2022

டெலிகிராம் புதிய அப்டேட்: அட்டகாசமான அம்சங்களுடன் வெளியான வெர்ஷன் 8.5! முழு விவரம்.!

 ரியாக்ஷன்ஸ் மற்றும் பல அம்சங்களை

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக டெலிகிராம் நிறுவனமும் புதிய அம்சங்களை கொண்டுவருகிறது. அதாவது டெலிகிராம் தனது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட் வழியாக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

டெலிகிராம் செயிலிக்கு தற்போது வெர்ஷன் 8.5 அப்டேட் கிடைத்துள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது பக் பிக்ஸஸ்(Bug Fixes)உடன் சேர்த்து வீடியோ ஸ்டிக்கர்ஸ், மேம்படுத்தப்பட்ட மெசேஜ் ரியாக்ஷன்ஸ் மற்றும் பல அம்சங்களை கொண்டுவந்துள்ளது. எனவேஇந்த புதிய அம்சங்களை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக ஒரு ப்ளாக் போஸ்ட் வழியாக டெலிகிராம் நிறுவனம் இந்த லேட்டஸ்ட் அப்டேட் குறித்து அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போது வந்துள்ள இந்த புதிய அப்டேட் வரும் நாட்களில் அனைத்து யூசர்களையும் சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.

வீடியோ ஸ்டிக்கர்கள்

முன்னதாக இந்த ஸ்டிக்கர்களை உருவாக்குவதற்கு அடோப் இல்லஸ்ட்ரேட்டர் போன்ற ஸ்பெஷல் சாப்ட்வேர்களும் தேவைப்பட்டன. ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம் டெலிகிராம் நிறுவனம், வழக்கமான வீடியோக்களிலிருந்து கன்வெர்ட் செய்யப்படும் ஸ்டிக்கர்களுக்கான ஆதரவைச் சேர்க்கிறது. எனவே பயனர்கள் எந்தவொரு வீடியோ எடிட்டிங் டூலையும் பயன்படுத்தி ஸ்டிக்கர்களை எளிமையாக உருவாக்க முடியும்.

அதேபோல் கஸ்டம் வீடியோ ஸ்டிக்கர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை யூசர்களுக்குக் கற்பிக்கும் வீடியோ ஸ்டிக்கர் கைடையும் டெலிகிராம் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான ரியாக்ஷன்ஸ்

இப்போது வழங்கப்பட்டுள்ள டெலிகிராம் 8.5 அப்டேட் ஆனது ஸ்மாலர் ரியாக்ஷனை வழங்குகிறது. மேலும் இது மெனுவில் இருக்கும் ஒரு ஒரு ரியாக்ஷனை அழுத்திப் பிடிப்பதன் மூலம் 'லார்ஜர் எபெக்ட்டை' அனுப்ப உதவுகிறது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் டெலிகிராமில் உள்ள ரியாக்ஷன்ஸ் இப்போது மிகவும் கச்சிதமான அனிமேஷன்களை பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர புதிய அப்டேட் ஆனது மெசேஜ்களுக்கு ஐந்து புதிய ரியாக்ஷன்களையும் சேர்க்கிறது, அவை ஹார்ட் ஃபேஸ், மைண்ட்ப்ளோன், வொண்டரிங், அப்யூஸிங் மற்றும் கிளாப்பிங் ஈமோஜிகள் போன்றவை ஆகும். குறிப்பாக இந்த ரியாக்ஷன்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

பக் பிக்ஸஸ்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த டெலிகிராம் செயலியில் கண்டறியப்பட்ட சிக்கல்களைச் சரிசெய்வதில் முழுமையாக கவனம் செலுத்தி உள்ளதாக டெலிகிராம் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த புதிய வெர்ஷன்8.5 அப்டேட் ஆனது மேம்படுத்தப்பட்ட கால் அழைப்பு குவாலிட்டியைக் கொண்டுவருகிறது. பின்பு இன்ஸ்டன்ட் வியூபேஜ்களை மொழிபெயர்ப்பதற்கான ஆதரவையும் சேர்த்துள்ளது.

அதேபோல் இந்த புதிய அப்டேட் ஷேரிங் மெனுவிலிருந்து சைலன்ட் மெசேஜ்களை அனுப்பும் விருப்பத்தையும் கொண்டுவருகிறது..மேலும் ஐஓஎஸ் யூசர்கள், டேப் பாரில் உள்ள ஐகான்களை தட்டும்போது புதிய அனிமேஷன்களை காண்பார்கள் என்று டெலிகிராம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக