டாடா குழுமத்தின் கைகளுக்கு வந்துள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் மொத்தமும் டாடா கைப்பற்றியுள்ள நிலையில் ஊழியர்கள் வேலை செய்யும் முறையில் இருந்து உணவு சேவை வரையில் பல மாற்றங்களை டாடா கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் டாடா குழுமத்திற்கு வந்த பின்பு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த விமானப் பயணிகளை ரத்தன் டாடா-வே வரவேற்பு கொடுத்துள்ளார்.
டாடா - ஏர் இந்தியா
ஜனவரி 27ஆம் தேதி ஏர் இந்தியாவைக் கைப்பற்றிய டாடா உடனடியாகப் பல மாற்றங்களை அறிமுகம் செய்த நிலையில், ஏர் இந்தியா-வின் சில விமானத்தில் ரத்தன் டாடா விமானப் பயணிகளுக்கு வரவேற்கும் வகையில் ஆடியோ வாயிலாகக் குறுஞ்செய்தி தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா
டாடா குழுமம் ஏர் இந்தியாவின் புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கிறது. ஏர் இந்தியா மீண்டும் பயணிகள் வசதி மற்றும் சேவையின் அடிப்படையில் விருப்பமான விமான நிறுவனமாக மாற்ற டாடா குழுமம் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக உள்ளது என ரத்தன் டாடா அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
3 நிறுவனமே நஷ்டம்
இந்த ஆடியோவை வீடியோ வாயிலாகவும் ஏர் இந்தியா டிவிட்டர் பக்கத்தில் டாடா குழுமத்தின் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. தற்போது டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா, ஏர் ஏசியா, விஸ்தாரா என 3 விமான நிறுவனங்கள் உள்ளது. ஆனால் 3 நிறுவனமே நஷ்டத்தில் இயங்குகிறது என்பது தான் சோகம். இதை எப்படி லாபகரமான வர்த்தகமாக டாடா மாற்றப்போகிறது என்பது தான் முக்கியமான சவால்.
18,000 கோடி ரூபாய் டீல்
டாடா குழுமத்தின் டேலெஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கி மொத்த நிறுவனத்தையும் சுமார் 18,000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றப்பட்டது. இதில் 15,300 கோடி ரூபாய் ஏர் இந்தியா கடனை செலுத்துவதற்காகவும், மீதமுள்ள 2,700 கோடி பணமாகவும் மத்திய அரசு பெற்றது.
AI Asset Holding நிறுவனம்
ஏர் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசு விமானங்கள், பார்கிங் ஸ்லாட், ஊழியர்கள், கட்டமைப்புகளை மட்டுமே டாடாவுக்கு அளித்தது. ஏர் இந்தியாவின் பல ரியல் எஸ்டேட் சொத்துக்கள், மற்றும் சில வர்த்தகப் பிரிவுகளை AI Asset Holding Ltd என்ற SPV நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டது.
பட்ஜெட் நிதி ஒதுக்கீடு
AI Asset Holding ஹோல்டிங்இந்தக் கடனை தீர்க்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் சுமார் 51,971 கோடி ரூபாய் தொகையை ஏர் இந்தியா நிலுவையில் உள்ள கடனை தீர்க்க ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக