மனிதர்கள் சந்திரனிலும் செவ்வாய் கிரகத்திலும் வாழக்கூடிய எதிர்காலத்தை நோக்கிப் பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளி நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் இதை அதன் முக்கிய லட்சியமாகக் கருதுகின்றன. எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் ஒரு "தன்னிறைவு நகரத்தை" உருவாக்க விரும்புகிறார். இதனால் பூமியில் இருந்து செல்லும் உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியும் என்று கூறுகிறார். நாசாவும் அதன் ஆர்ட்டெமிஸ் -1 பணியுடன் மீண்டும் நிலவுக்குச் செல்கிறது.
இது சந்திர மேற்பரப்பு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால பயணங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைகிறது. இந்த விண்வெளி ஆராய்ச்சி பந்தயத்தில் புதிய போட்டியாளராக இப்போது டொயோட்டா நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் படி டொயோட்டா நிறுவனம் ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவுடன் இணைந்து சந்திர வாகனத்தை உருவாக்குகிறது. வரும் 2040ஆம் ஆண்தில், நிலவில் மக்கள் வாழ உதவும் வகையில் டொயோட்டாவின் லூனார் ரோவர் உருவாக்கப்பட்டு வருகிறது என்று சமீபத்திய தகவல் வெளிப்படுத்தியுள்ளது.
இது செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழவும் உதவும் வகையில் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் இந்த லூனார் ரோவருக்கு 'டொயோட்டா லேண்ட் குரூஸர் (Toyota Land Cruiser) என்று பெயரிட்டுள்ளது. டொயோட்டாவின் இந்த தனித்துவமான கண்டுபிடிப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாகச் சந்திர வாகனம் "Lunar Cruiser" என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், மக்கள் இதனுள் தங்கி சந்திரனில் தேவையான வேலைகளைச் செய்யலாம்.
சந்திரனின் மேற்பரப்பில் பயணிக்க ஆறு உறுதியான சக்கரங்கள்
இந்த வாகனத்தினுள் வீரர்கள் அமர்ந்து சாப்பிடலாம், வேலை செய்யலாம், தூங்கலாம் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் தொழில்நுட்ப தகவல் முறைகளையும் அணுகலாம், நிலவின் முழு பகுதியையும் சுற்றி வலம்வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, லூனார் குரூஸர் லேண்ட் க்ரூஸருக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிகிறது. ஆனால், கடுமையான ஆயுதம் தாங்கிய உடல் மற்றும் பள்ளங்கள் நிறைந்த சந்திர மேற்பரப்பில் சவாரி செய்ய ஆறு உறுதியான சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சந்திரனின் மேற்பரப்பை ஆராய்வதற்கான பயணங்களில் சீனாவின் சாங் 5 மற்றும் இந்தியாவின் சந்திரயான் 2 போன்ற தற்போதைய ரோவர்களின் மிகவும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. லூனார் குரூஸரில் ரோபோ கை பொருத்தப்பட்டிருக்கிறது, இது நிலவில் தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளைச் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கூப்பிங், தூக்குதல் மற்றும் துடைப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு அதன் கைப்பிடி நிலையை மாற்ற முடியும்.
இந்த ரோபோ கையை ஒரு துணிகர கிடாய் ஜப்பான் இன்க் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. சந்திர வாகனம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது முழுமையாகத் தயாராகவில்லை என்று ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னர் இது 2020 ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் இன்னும் வெளியாகவில்லை. அடுத்தபடியாக இது எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த குறிப்பிட்ட தேதி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
JAXA மற்றும் Toyota முதன் முதலில் 2019 இல் சந்திர ரோவருக்கான கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, மேலும் ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கடந்த ஆண்டு இந்த வாகனத்தின் பெயரை வெளிப்படுத்தியது. உண்மையில் இதன் தோற்றமே நமது ஆர்வத்தை அதிகரிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இதன் தோற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், இதன் செயல்பாட்டில் அதிகப்படியான கவனத்தை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிலவில் வீரர்கள் சவாரி செய்ய நகரும் கூடாரமாக இந்த லூனார் லேண்ட் குரூஸர் இருக்கப் போகிறது.
இதேபோல், சமீபத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடும் ஆராய்ச்சியின் முடிவில் மிகவும் சுவாரசியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்புகள் படி, மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. சந்திரனின் பாறைகளின் அடுக்கு, ரெகோலித் என்று அழைக்கப்படுகிறது. இது மனித உயிர்களைத் தக்கவைக்க போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
நம்பப்பட ஒரு புதிய ஆய்வின் கணிப்புகள், சந்திரனின் மேற்பரப்பில் 8 பில்லியன் அல்லது 800 கோடி மக்களை சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு உயிருடன் வைத்திருக்க போதுமான ஆக்ஸிஜன் நிலவில் புதைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக