Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

காவல்துறைக்காக 44 ஃபோர்ஸ் கூர்கா கார் கொள்முதல்... இந்த காரின் ஒரு யூனிட்டின் விலை எவ்ளோ தெரியுமா?

காவல்துறைக்காக 44 ஃபோர்ஸ் கூர்கா கார் கொள்முதல்... இந்த காரின் ஒரு யூனிட்டின் விலை எவ்ளோ தெரியுமா?காவல்துறைக்காக 44 ஃபோர்ஸ் கூர்கா கார் வாங்கப்பட்டிருக்கின்றது. இந்த கொள்முதல் நிகழ்வு எங்கு அரங்கேறியிருக்கின்றது என்பது பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஃபோர்ஸ் (Force) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்று கூர்கா (Gurkha). இது ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக வாகனமாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றி வாகனமான தார் எஸ்யூவி-க்கு போட்டியாக இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இந்த காரையே காவல்துறையினர் பயன்பாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் ஓர் மாநில அரசு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நமது அண்டை மாநிலமான கேரளாவிலேயே இந்த கொள்முதல் நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. ஆம், கேரள அரசே அம்மாநிலத்தின் காவல்துறை பயன்பாட்டிற்காக போர்ஸ் கூர்காவை வாங்கியிருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 44 யூனிட் கூர்காவை அது வாங்கியிருக்கின்றது. மாநிலத்தின் ரிமோட் பகுதிகளில் பேட்ரோல் வாகனமாக பயன்படுத்துவதற்காக இக்கார்கள் வாங்கப்பட்டுள்ளன. கேரள காவல்துறையில் ஏற்கனவே 72 மஹிந்திரா பொலிரோ கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றின் வரிசையில் புதிதாக வாங்கப்பட்டிருக்கும் 44 யூனிட் கூர்காவும் இணைக்கப்பட்டுள்ளன. ஃபோர்ஸ் கூர்கா கேரள காவல்துறையில் இணைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் ஃபோர்ஸ் கூர்காவும் ஒன்று. இந்த காரை 2020ம் ஆண்டிலேயே முதல் முறையாக ஃபோர்ஸ் நிறுவனம் நாட்டில் வெளியீடு செய்தது. இதைத்தொடர்ந்து, 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இந்த கார் ரூ. 14.10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பாக்ஸ் போன்ற வடிவம், கிளாம்ஷெல் பான்னெட் மற்றும் வட்ட வடிவ ஹெட்லைட் ஆகியவற்றில் கூர்கா அட்டகாசமாக காட்சியளிக்கின்றது. இக்காரின் பின் புறத்திற்கு கூடுதல் கவர்ச்சியைச் சேர்க்கும் வகையில் முழு-அளவுள்ள ஸ்பேர் டயர் டெயில்கேட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறைக்காக 44 ஃபோர்ஸ் கூர்கா கார் கொள்முதல்... இந்த காரின் ஒரு யூனிட்டின் விலை எவ்ளோ தெரியுமா?

ஃபோர்ஸ் கூர்கா வெறும் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.6 லிட்டர், 4 சிலிண்டர் எஞ்ஜினே அக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்கும். அதிகபட்சமாக 115 எச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை அது வெளியேற்றும்.

மேலும், 35 டிகிரி கோணத்தில் உள்ள சாலையைக் கூட மிக அசால்டாக கடக்கும் திறனை இது காருக்கு வழங்குகின்றது. இதுமாதிரியான சிறப்பான வசதியை கூர்கா கொண்டிருக்கின்றன காரணத்தினாலேயே கேரள காவல்துறையில் இக்கார் இணைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க 700 மிமீ ஆழமான நீர் நிறைந்த பகுதியைக் கடக்கும் திறனும் இக்காருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

4,116 மிமீ நீளம், 1,812 மிமீ அகலம் மற்றும் 2,075 மிமீ உயரம் ஆகிய அளவுகளில் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் வீல்பேஸ் 2,400 மிமீ ஆகும். ஆர்ம் ரெஸ்ட், பவர் விண்டோ, கப் ஹோல்டர், 7 இன்ச் அளவுள்ள தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன்), நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் மோல்டட் ஃப்ளூர் ஆகிய அம்சங்களும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக