Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 பிப்ரவரி, 2022

51வினாடியில் கூகுளை ஹேக் செய்தவருக்கு ரூ.3கோடி சம்பளத்தில் வேலை-பரவிய வதந்தி., இதுமட்டுமே உண்மை: இளைஞர் பதில்!

பிரதான பயன்பாடாக இருக்கும் கூகுள் சர்ச் எஞ்சின்

ரித்துராஜ் சவுத்திரி என்ற இளைஞர் கூகுளில் உள்ள குறைபாட்டை கண்டறிந்து தெரிவித்துள்ளார். இந்த பிழையை கூகுள் ஒத்துக் கொண்டு அந்த இளைஞரை கௌரவித்துள்ளது. பீகாரை சேர்ந்த ரிதுராஜ் சவுத்திரி என்ற இளைஞர் சமீபத்தில் கூகுளை ஹேக் செய்ததாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு ரூ.3.36 கோடி சம்பளத்துடன் கூகுளில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. தான் கூகுளை ஹேக் செய்யவில்லை எனவும் சன்மானம் கூகுளில் வேலை போன்று எதுவும் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதான பயன்பாடாக இருக்கும் கூகுள் சர்ச் எஞ்சின்

கூகுள் சர்ச் எஞ்சின் என்பது உலக அளவில் அத்தியாவசிய பிரதான பயன்பாடாக இருக்கிறது. ஒவ்வொரு தகவல், ஒவ்வொரு தேவைக்கும் நாம் உடனடியாக அணுகவது கூகுளை மட்டுமே. எவ்வளவு பிரதான பயன்பாடாக கூகுள் கருதப்பட்டாலும் இதன் சர்ச் எஞ்சினும் சில பிழைகள் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இருக்கும் கோடிங் குறைபாடுகளை அப்டேட் மூலம் நிறுவனம் சரி செய்து வருகிறது. கூகுளில் மட்டுமல்ல பல்வேறு பிரதான செயலிகளிலும் இருக்கும் குறைபாடுகளும் அப்டேட் மூலம் சரிசெய்யப்பட்டு வருகிறது.

பயன்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்

பல்வேறு சமயங்களிலும் பயனர்கள் கூகுள் சர்ச் எஞ்சின் போன்ற பயன்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து அதை முறையாக நிறுவனங்களிடம் தெரிவிப்பது உண்டு. பிழைகள் உறுதி செய்யப்படும் பட்ச்ததில் குறைபாட்டை கண்டறிந்து தெரிவிக்கும் பயனர்களுக்கு வெகுமதிகள், விருதுகள் வழங்கி கௌரவிப்பது உண்டு. அதேபோல் ரித்துராஜ் சவுத்திரி என்ற 19 வயது இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பொறியியல் படிப்பு பயின்று வருகிறார். இவர் மணிப்பூரில் உள்ள ஐஐடி-யில் படித்து வருகிறார். இவர் கணினி கோடிங், சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்த படிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் கூகுளில் இருக்கும் குறைபாடு ஒன்றை கண்டறிந்து கூறியுள்ளார்.

ரித்துராஜ் கண்டறிந்து சொன்ன கூகுளின் குறைபாடு
ரித்துராஜ் கண்டறிந்து சொன்ன கூகுளின் குறைபாடு

ரித்துராஜ் கண்டறிந்து சொன்ன கூகுளின் குறைபாடானது மிகப்பெரிய பிழை ஆகும். இந்த பிழையை சைபர் குற்றாவாளி ஹேக்கர்கள் கண்டறியும் பட்சத்தில் இதனால் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த பிழை கூகுளிடம் தெரிவித்த பிறகு, இது மிகப்பெரிய பிழைதான் என கூகுள் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த பிழையை சரிசெய்ததோடு ரித்துராஜ்-க்கு கூகுள் பாராட்டு தெரிவித்து அவருக்கு கூகுள் Hall of Fame Award என்ற விருதை வழங்கி சிறப்பித்ததாக கூறப்படுகிறது. கூகுள் ஆராய்ச்சியாளர் என்ற பட்டியலில் இவர் பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தக்க சன்மானம் மற்றும் கூகுளில் வேலை கிடைக்க வாய்ப்பு

ரித்துராஜ் சவுத்திரி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறைபாடானது p-2 எனப்படும் இரண்டாம் கட்ட குறைபாடு என தெரிவிக்கப்படுகிறது. தற்போது p-o என்ற குறைபாடுகளை கண்டறியும் பட்சத்தில் அவருக்கு தக்க சன்மானம் மற்றும் கூகுளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்நது ரித்துராஜ் சவுத்திரி கூகுளில் வேறு குறைபாடுகள் இருக்கிறதா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பல்வேறு வதந்தித் தகவல்கள்

ஆனால் சமூகவலைதளங்களில் பல்வேறு வதந்தித் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து இந்தியில் வெளியான வதந்தித் தகவல்களை விரிவாக பார்க்கலாம். உலகின் மிகப்பெரிய தேடுபொறு வலைத்தளமான கூகுளை சில நொடிகளில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ரித்துராஜ் சவுத்திரி என்ற இளைஞர் கூகுளை 51 வினாடிகளில் ஹேக் செய்தார். அமெரிக்காவில் கூகுள் அதிகாரிகள் குழம்பித் தவித்துள்ளனர். ரித்துராஜ் கூகுளின் சேவைகளை மீண்டும் தொடங்கி ஹேக் செய்யப்பட்ட வழிமுறை குறித்து கூகுளுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

வதந்தித் தகவல்களை நம்ப வேண்டாம்: இளைஞர் பதில்

மேலும் பரவிய வதந்தித் தகவல்களில், "கூகுள் அமெரிக்காவில் 12 மணிநேரம் ஒரு கூட்டத்தை நடத்தி, இறுதியாக ரித்துராஜை பணியில் அமர்த்த முடிவு செய்தது எனவும் அவருக்கு ரூ.3.66 கோடி சம்பளத்துடன் வேலை அளிப்பதாக கடிதம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி ரித்துராஜ்-க்கு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் இரண்டு மணி நேரத்தில் கூகுள் அவருக்கு பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்துள்ளது எனவும் ரித்துராஜ் தனியார் ஜெட் விமானம் மூலம் அமெரிக்க செல்ல இருக்கிறார் என வதந்தித் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ரித்துராஜ் விளக்கமளித்துள்ளார், தனக்கு ரூ.3.36 கோடி சம்பளத்துடன் கூகுளில் வேலை எதுவும் கூகுளில் வழங்கப்படவில்லை தான் கூகுளை ஹேக் செய்யவில்லை எனவும் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் விளக்கமளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக