குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களை டெலீட் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்துஆலோசித்து வருகிறது. அதாவது வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது நாம் கை தவறி அல்லது பிழைகளும் ஒருசெய்தியை குரூப் அல்லது அனுப்பி இருப்போம்.
இதுபோன்ற சுழுலில் பதறிப்போய் டெலிட் பார் எவரி ஒன் என்ற வாய்ப்பை பயன்படுத்தி நாம் மேசேஜை எளிமையாக அழிப்பது வழக்கம். இருந்தபோதிலும் இந்த அம்சம் சிறுது நேரத்துக்கு மட்டுமே கிடைக்கும். அதற்குப் பிறகு டெலிட் பார் எவரி ஒன் கொடுக்க முடியாது.
இந்நிலையில் ஒவ்வொரு வாட்ஸ்அப் பயனர்களுக்கும் மெசேஜ்களை டெலீட் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. தற்போது உள்ள விதியின்படி ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் 16 நொடி வரையிலும் மட்டுமே நீங்கள் டெலிட் பார் எவரி ஒன் என்ற வாய்ப்பை பயன்படுத்தி மெசேஜை டெலீட் செய்ய முடியும்.
குறிப்பாக இந்த கால வரம்பை நீட்டிப்பது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது என்றுவாபேடா இன்ஃபோ என்ற நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது எப்போது அமலுக்கு வரும் என சரியானதகவல் இல்லை.
அதேபோல் வாட்ஸ்அப் பீட்டா வெர்சன் 2.22.410 என்ற மேம்படுத்தப்பட்ட ஆப் பயன்படுத்தும் பயனர்களுக்கு, மெசேஜை நிரந்தரமாக டெலீட் செய்வதற்கான வாய்ப்பை இரண்டு நாள் 12 மணி நேரத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது ஒரு மெசேஜை நீங்கள் பதிவு செய்த பிறகு இரண்டரை நாள் கழித்தும் கூட மற்றவர்களின் பார்வையில் இருந்து நிரந்தரமாக டெலீட் செய்ய முடியும். மெசேஜ் டெலீட் செய்யப்பட்ட பிறகு, "திஸ் மெசேஜ் வாஸ் டெலீடட் (இந்த மெசேஜ் டெலீட் செய்யப்பட்டது) என்ற நோட்டிபிகேஷன் உங்களுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குழுவில் வரும் மெசேஜ்களை நீக்குவதற்கு அதன் அட்மின்களுக்கு அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு குழுவில்யார் மெசேஜ் அனுப்பினாலும் அதை அட்மினால் நீக்கம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இது குழு நிர்வாகியால் நீக்கப்பட்டது என திரையில் ஒரு குறிப்பு மட்டும் தோன்றும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி க்ரூப்பில் பகிரப்படும் பல்வேறு மெசேஜ்களுக்கும் குழு அட்மின்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை இருந்தது. இந்த தொல்லையில் இருந்து விடுபட குழு ஆரம்பிக்கும் அட்மின்கள் யாரெல்லாம் மெசேஜ் செய்யலாம் என்ற விருப்பத்தை தேர்வு செய்யும் வசதி பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் ஒருவர் தவறாக மெசேஜ் செய்துவிட்டார் அதை க்ரூப் அட்மினால் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பொறுப்பேற்கும் நிலைக்கும் குழு அட்மின்கள் தள்ளப்பட்டனர். இதையடுத்து தேவையற்ற பதிவுகளை நீக்கும் வகையிலான புதிய அப்டேட்டை க்ரூப் அட்மின்களுக்கு வாட்ஸ்அப் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக