இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மதுரை மாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 16கி.மீ தூரத்தில் கோயில் உள்ளது. மதுரையிலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
வெற்றி விநாயகர் மூலஸ்தானத்தில் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளுகிறார்.
ராஜராஜேஸ்வரி அம்மன் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.
அம்மன் வலது காலை மடக்கி, இடது காலை தரையில் ஊன்றி அமர்ந்த கோலத்தில் கரங்களில் அங்குசம், கரும்பு, மலர் செண்டுடன் காட்சியளிக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
இங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.
வெற்றி விநாயகர் கோயில் மூலஸ்தானத்தில் விநாயகர் நாகர்களுடன் காட்சியளிக்கிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சங்கடஹர சதுர்த்தி மற்றும் மார்கழி முழுவதும் சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.
நடராஜருக்கு ஆனி உத்திரம், முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி திருவிழா, துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளியில் எலுமிச்சம் பழத்தில் பக்தர்கள் விளக்கேற்றுகின்றனர்.
அம்மனுக்கு பங்குனி முதல் வெள்ளியில் கூழ் காய்ச்சும் விழா, 2ம் வெள்ளியன்று பொங்கல் விழா, 3ம் வெள்ளியன்று அன்னதானம் நடக்கிறது.
நவராத்திரியில் அம்மனுக்கு 10 நாட்களும் கொலு அலங்காரம் நடக்கும்.
துர்க்காஷ்டமியன்று சண்டி ஹோமம், விஜயதசமியன்று ஸ்ரீவித்யா ஹோமம் சிறப்பாக நடந்து வருகிறது.
தேய்பிறை அஷ்டமியின்று கால பைரவருக்கு வடைமாலை சாற்றுப்படியாகி பூஜைகள் நடக்கிறது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்தல விநாயகரை வேண்டுவோருக்கு தேர்வு, வேலை வாய்ப்பு, செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
வேண்டுதல் நிறைவேறியவர்கள் 11 தேங்காய்களுடன் கூடிய மாலையை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக