Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 பிப்ரவரி, 2022

ஸ்டைலுக்காக அல்ல... பைக்கில் இதை எதுக்காக குடுக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

 ஸ்டைலுக்காக அல்ல... பைக்கில் இதை எதுக்காக குடுக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!


பைக்குகளில் வழங்கப்படும் ஹேண்ட் கார்டுகளின் உண்மையான நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். குறிப்பாக இரு சக்கர வாகனங்களை அதிக வேகத்தில் ஓட்டும்போது நமக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை. ஒரு சில ஆக்ஸஸெரீஸ்கள் (Accessories) பைக் ரைடர்களுக்கு இந்த பாதுகாப்பை வழங்க கூடியவையாக இருக்கின்றன.

பைக் ஹேண்ட் கார்டுகள் (Hand Guards) இதில் ஒன்று. பைக் ஹேண்ட் கார்டுகள் மூலம் ஒரே ஒரு நன்மை மட்டுமே கிடைக்கிறது என பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் பைக் ஓட்டுபவருக்கு இந்த ஹேண்ட் கார்டுகள் பல்வேறு வழிகளில் உதவி செய்கின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஹேண்ட் கார்டுகளின் முக்கியமான பலன் என்னவென்பதை அதன் பெயரிலேயே தெரிந்து கொள்ளலாம். நாம் இது உங்கள் கைகளுக்கு தேவையான அளவிற்கு பாதுகாப்பை வழங்கும். எனவே ஹேண்ட் கார்டுகளை கைகளின் பாதுகாவலன் எனவும் அழைக்கலாம். குறிப்பாக கரடு முரடான சாலைகளில் நீங்கள் பயணிக்கும்போது ஹேண்ட் கார்டுகள் உங்களுக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.

மோசமான சாலைகளில் நீங்கள் பயணம் செய்யும்போது கற்கள் போன்றவை உங்கள் கைகளை காயப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எங்கிருந்தோ திடீரென பறந்து வந்து கைகளை சேதப்படுத்தும் கற்களில் இருந்து ஹேண்ட் கார்டுகள் உங்களை பாதுகாக்கின்றன. இரு சக்கர வாகனங்களில் அதிக வேகத்தில் பயணிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

அப்படி அதிக வேகத்தில் பயணிக்கும்போது கல் தாக்கினால் கைகளுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாக ஏற்படும். அத்துடன் கற்கள் திடீரென தாக்கினால், பைக்கை ஓட்டுபவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதன் காரணமாக சரியாக செப்பனிடப்படாத மற்றும் கற்கள் தாக்கும் அபாயமுள்ள சாலைகளில் பயணம் செய்வதை பலரும் தவிர்க்கின்றனர்.

ஆனால் உங்கள் பைக்கில் ஹேண்டு கார்டு இருந்தால், இப்படிப்பட்ட சாலைகளிலும் கூட உங்கள் கைகள் பாதுகாப்பாக இருக்கும். சில சமயங்களில் கற்கள் போன்றவற்றை ஏற்றி செல்லும் லாரிகளை பின் தொடர்ந்து செல்ல வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். மோசமான சாலைகளை கூட தவிர்த்து விடுவதற்கான வாய்ப்புகள் நமக்கு உள்ளது. அதற்கு பதிலாக மாற்று வழியில் செல்லலாம்.

ஆனால் கைகளை பாதிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரி போன்ற வாகனங்களை திடீரென பின் தொடர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதனை தவிர்ப்பது கடினம். ஆனால் பைக்கில் ஹேண்டு கார்டு இருந்தால், எந்த சாலை என்றாலும், எந்த வாகனங்களை பின் தொடர்ந்து செல்வதாக இருந்தாலும், உங்கள் கைகள் பாதுகாப்பாக இருக்கும்.

இது மட்டுமே ஹேண்ட் கார்டுகளின் முக்கியமான பலன் என பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் குளிருக்கு எதிராகவும் ஹேண்ட் கார்டுகள் உங்களுக்கு மிக சிறப்பான பாதுகாப்பை வழங்கும். குறிப்பாக குளிர் வாட்டி வதைக்கும் குளிர் காலங்களின்போது உங்கள் பைக்கில் ஹேண்ட் கார்டுகள் இருப்பது பலன் அளிக்கும்.

குளிர் காலங்களில் வெப்ப நிலை மிகவும் குறைவாக இருக்கும். இது பைக் ஓட்டுபவர்களுக்கு பல்வேறு விதங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலான பைக்குகளின் பார்கள் (Bars) உலோகம் சார்ந்தவையாகதான் (Metallic) உள்ளன. உலோகம் சார்ந்த பார்கள் நல்ல கடத்திகள் (Conductors) ஆகும்.

எனவே குறைவான வெப்ப நிலைகளில் பைக் ஓட்டும்போது உங்கள் கைகள் உறையும் சூழல் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன! மிக கடுமையான குளிர் நிலவும் சூழல்களில் இதுபோன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கும் உங்களுக்கு ஹேண்ட் கார்டுகள் அவசியம்.

ஏனெனில் உங்கள் பைக்கின் பார்களை 'இன்சுலேட்' (Insulate) செய்வதன் மூலம் ஹேண்ட் கார்டுகள் உங்களுக்கு உதவி செய்யும். மின்சாரம், வெப்பம் மற்றும் ஒலி போன்றவற்றை தன்னூடாக செல்ல விடாத ஒரு மெட்டீரியலை கொண்டு ஏதேனும் ஒன்றை பாதுகாப்பதுதான் 'இன்சுலேட்' என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எனவே ஹேண்ட் கார்டுகள் இருந்தால் உங்கள் கைகள் குளிரால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். கெட்டியான கையுறைகளை (Gloves) அணிவதன் மூலமாக இந்த பிரச்னையை சமாளிப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் கெட்டியான கையுறைகளை அணிவதே சவாலான ஒரு விஷயம்தான். ஏனெனில் உங்கள் விரல்களை சுதந்திரமாக நகர்த்த முடியாத சூழல் இதனால் ஏற்படலாம்.

கையுறைகளை அணிவதில் உள்ள முக்கியமான பிரச்னை இது. ஆனால் பைக் ஓட்டும்போது உங்கள் விரல்கள் சுதந்திரமாக இயங்க கூடிய வகையில் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பைக்கை சரியாக கட்டுப்படுத்த இயலாமல் போகலாம். அத்துடன் காற்றுக்கு எதிராகவும் ஹேண்ட் கார்டுகள் உங்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

இதுவும் ஹேண்ட் கார்டுகளின் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். நீங்கள் வேகமாக செல்லும்போது காற்று பலமாக வீசும். இதுவும் உங்கள் கைகளை பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் காற்று பலமான வீசினால், பைக்கின் ஹேண்டில் பாரில் இருந்து உங்கள் கைககள் கட்டுப்பாட்டை இழப்பதற்கான அபாயமும் இருக்கிறது.

குறிப்பாக குளிர்காலங்களில் வீசும் காற்று கைகளை நடுங்க செய்யும். இதுபோன்ற சூழல்களிலும் ஹேண்ட் கார்டுகள் உங்கள் கைகளுக்கு பாதுகாவலனாக இருக்கும். ஹேண்ட் கார்டுகள் உங்கள் கைகளை மட்டுமல்லாது, உங்கள் பைக்கின் பார்களையும் பாதுகாக்கின்றன. விபத்துக்களின்போது உங்கள் பைக்கின் பார்களுக்கு ஹேண்ட் கார்டுகள் பாதுகாப்பை வழங்குகின்றன.

ஹேண்ட் கார்டுகள் இல்லாவிட்டால் உங்கள் பைக்கின் பார்கள் சேதம் அடையலாம். சரி, அப்படியானால் ஹேண்ட் கார்டு சேதம் அடையுமே? என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம். உண்மைதான். ஆனால் ஹேண்ட் கார்டுகளுக்கு சிறிய அளவிலான சேதமே ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அல்லது அவற்றுக்கு சேதம் ஏற்படாமலும் போகலாம்.

அத்துடன் பார்களை மாற்றுவதை விட ஹேண்ட் கார்டுகளை மாற்றுவது மலிவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிறிய விபத்துக்களின்போதும் ஹேண்ட் கார்டுகள் கைகளுக்கும் ஓரளவு பாதுகாப்பை வழங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஹேண்ட் கார்டுகளுடன் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு கவசங்களையும் அணிந்து கொண்டால் நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக