Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 பிப்ரவரி, 2022

அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஜியோபுக் லேப்டாப்.! முழு விவரம்.!

ஜியோபுக் லேப்டாப்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் ஜியோபோன் 5ஜி, ஜியோபுக் லேப்டாப் என பல சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்து. இந்நிலையில் ஜியோபுக் லேப்டாப் சாதனத்தின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோபுக் லேப்டாப்

91mobiles தகவலின்படி, இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல் ஆனது விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக சியோமி, டெல், லெனோவா நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு போட்டியாக பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஜியோபுக் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த ஜியோபுக் லேப்டாப் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்தஜியோபுக் லேப்டாப் ஆனது மீடியாடெக் எம்டி8788 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதள வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 2ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 32ஜிபி ஈஎம்எம்சி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மினி எச்.டி.எம்.ஐ போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், குவால்காம் ஆடியோ சிப், JioStore, JioMeet,JioPagesஆப்ஸ் மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் மைக்ரோசாப்ஃப்ட் ஆபிஸ்போன்ற பல சிறப்பான
ஆதரவுகளுடன் இந்த புதிய லேப்டாப் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஜியோபுக் லேப்டாப் மாடலில் வெப் கேமரா வசதியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் தனித்துவமான வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த லேப்டாப் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜியோபோன் 5ஜி

அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஜியோபோன் 5ஜி ஆனது ரூ.9000 அல்லது ரூ.12,000-விலையில்அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

புதிய ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1600×720 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் வெளிவரும். ஜியோபோன் 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல். இந்த ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்தஸ்மார்ட்போன் வெளிவரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக