Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

இதற்கு வைத்தியம் குற்றாலம்தான்... கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------
சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
--------------------------------------------

பக்கத்து வீட்டுக்காரி : உன் மாமியாரை 6 பேரு சேந்து அடிச்சுகிட்டிருக்காங்க, நீ என்ன வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கே? போய் உதவி ஏதும் செய்யலையா?
மருமகள் : ஏற்கனவே 6 பேரு இருக்காங்க, என்னோட உதவி அவங்களுக்கு தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்!
பக்கத்து வீட்டுக்காரி : 😣😣
--------------------------------------------
பாபு : உன் மகனுக்கு திருமண ஆசை வந்துடுச்சின்னு எப்படிச் சொல்ற?
கோபு : முகூர்த்த நாளெல்லாம் காலண்டர்ல பெரிய வட்டம் போட்டு வெச்சிருக்கானே!
பாபு : 😂😂
--------------------------------------------
விடுகதைகள்...!!
--------------------------------------------
1. அதிருசியான பலகாரம் ஒன்றின் பெயர்...

2. அறுபடை வீடுகளுள் ஒன்று...

3. அம்மா பொறிப்பது, சுட்டிகளுக்கு மிகவும் பிடித்தது...

4. பழங்களின் அரசன், மாமரத்துவாசன்...

5. இதற்கு வைத்தியம் குற்றாலம்தான்...

விடை: 

🍩 அதிரசம்

🏦 திருத்தணி 

🍪 அப்பளம் 

🍋 மாம்பழம் 

😇 பைத்தியம்
--------------------------------------------
சமையல் டிப்ஸ் !!
--------------------------------------------

🍵 ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து சலித்து சூப்பில் சேர்த்து கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.

🍵 வெஜ் சூப் செய்யும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சூப்புடன் கலந்தால் ருசியாகவும், கெட்டியாகவும் இருக்கும்.

🍵 சூப் செய்யும்போது கெட்டியாக இருக்க சோள மாவின் அளவை குறைத்து சத்து மாவை சேர்த்தால் கூடுதல் சத்து கிடைக்கும். சூப் கெட்டியாகி விடும்.

🍵 சூப் நீர்த்துப் போய்விட்டால், வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சூப்பில் கலந்தால் சூப் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.

🍵 முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து இடித்து, அத்துடன் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டினால் சத்தான சூப் தயார்.
--------------------------------------------
இன்றைய கடி...!!
--------------------------------------------
ஒருத்தனை ஒரு கொசு கடிச்சுச்சாம் ஆன அந்த கொசுவை அவன் அடிக்காம விட்டுட்டானாம் ஏன்? 
.
.
.
.
.
ஏன்னா அந்த கொசுல அவனோட இரத்தம் இருக்குல்ல.😜😜

ஒரு பறவை எழுதி கொண்டே இருக்கும் அது என்ன பறவை?
.
.
.
.
.
பென்குயின். ஏன்னா அதுல பென் இருக்குல.😎😎

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக