Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 பிப்ரவரி, 2022

ரொம்ப புதுசா இருக்கு... பேருந்து பயணிகளுக்கு அரசு திடீர் உத்தரவு... இதை யாரும் கொஞ்சம் கூட எதிர்பாக்கல!

ரொம்ப புதுசா இருக்கு... பேருந்து பயணிகளுக்கு அரசு திடீர் உத்தரவு... இதை யாரும் கொஞ்சம் கூட எதிர்பாக்கல!பேருந்து பயணிகளுக்கு அரசு திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். செல்போன்கள் இன்று நம் வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாக மாறி விட்டன. ஆரம்பத்தில் தொலை தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன்கள் தற்போது திரைப்படங்களை பார்க்கவும், பாடல்களை கேட்கவும் உபயோகிக்கப்படுகிறது. இதன் காரணமாக புதிய பிரச்னை ஒன்று தற்போது உருவாகியுள்ளது.

ஒரு சிலர் பொது இடங்களில் செல்போன்கள் மூலம் மிகவும் சத்தமாக பேசுகின்றனர். மேலும் அதிக 'வால்யூம்' வைத்து பாடல்களை கேட்பதையும், திரைப்படங்களை பார்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அருகில் இருப்பவர்களுக்கு இது தொந்தரவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அமைதியை பேண வேண்டிய மருத்துவமனை போன்ற இடங்களில் செல்போனை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் பேருந்துகளில் பயணிகள் செல்போனை பயன்படுத்துவதற்கும் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரள மாநில அரசுதான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது, பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவதற்கும், பாடல்களை சத்தமாக கேட்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் செல்போனில் சத்தமாக பேச கூடாது மற்றும் பாடல்களை சத்தமாக கேட்க கூடாது என்பது குறித்த அறிவிப்புகளை அரசு பேருந்துகளில் ஒட்டும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவு தொடர்பாக கேரள மாநில போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் கூறப்பட்டிருப்பதாவது: கேரள மாநிலத்தின் அரசு பேருந்துகளில் செல்போன்கள் மிக அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. பயணிகள் செல்போனில் அதிக சத்தத்தில் பேசுகின்றனர். சில சமயங்களில் அவர்களின் உரையாடல்கள் மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற செயல்கள் பேருந்துகளில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

எனவே அனைத்து பயணிகளுக்கும் பயணம் இனிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு கேரள மாநிலத்தில் வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்துள்ளன.

சாலையில் வாகனங்களில் பயணம் செய்யும்போது சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையே தேவை இல்லாமல் தகராறு ஏற்படும். ஒருவரின் நடவடிக்கை மற்றவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுதான் இதற்கு காரணம். உதாரணத்திற்கு யாராவது ஒருவர் செல்போனில் பேசி கொண்டே வாகனத்தின் மீது மோதுவது போல் வந்தால், தேவையற்ற தகராறுகள் ஏற்படும்.

சாலைகளில் மட்டுமல்லாது, பேருந்துகளிலும் இத்தகைய காட்சிகளை தற்போது அதிகமாக காண முடிகிறது. செல்போன் சத்தத்தை குறைக்க சொல்லி மறுத்து விட்டால், இரு நபர்களுக்கு இடையேயான தகராறாக அது மாறி விடுகிறது. இருவருக்கு இடையேயான இந்த தகராறு, பேருந்தில் பயணிக்கும் மற்றவர்களின் பயண அனுபவத்தையும் மோசமானதாக மாற்றுகிறது.

இதுபோன்ற தேவையற்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு அம்சமும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவதன் காரணமாகவோ அல்லது சத்தமாக பாடல்களை கேட்பதன் காரணமாகவோ ஓட்டுனரின் கவனம் சிதறுகிறது.

ஓட்டுனருக்கு பணி நேரத்தின்போது கவன சிதறல் ஏற்படவே கூடாது. ஒருவேளை கவன சிதறல் ஏற்பட்டால், பேருந்து விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதையும் மனதில் வைத்துதான் கேரள மாநிலத்தில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பலரும் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர்.

மறுபக்கம் இந்த உத்தரவிற்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என சமூக வலை தளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற விதிமுறைகளை கடைபிடிப்பது கடினமானது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், இது தொடர்பான உங்களது எண்ணத்தை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக