---------------------------------------------------
இன்றைய ஜோக்ஸ்...!!
---------------------------------------------------
நோயாளி : பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண எவ்வளவு செலவாகும் டாக்டர்...
டாக்டர் : 5 லட்சம் செலவாகும்...
நோயாளி : நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க டாக்டர்...
டாக்டர் : 😬😬
---------------------------------------------------
டாக்டர் : சுகர் குறைய அரைமணி நேரம் நடக்கணும்...
நோயாளி : நடக்கற காரியமா சொல்லுங்க டாக்டர்...
டாக்டர் : நீங்க நடக்கலேன்னா தான் காரியம் நடக்கும்...
நோயாளி : 😟😟
---------------------------------------------------
சிறந்த வரிகள்..!!
---------------------------------------------------
🎈 பலூன்களை போலத்தான் சில பிரச்சனைகளும்...
🎈 ஊதினால் உடையும் என தெரிந்த பின் ஊதி உடைப்பதை விட, பாதியில் பறக்க செய்வதே மிகவும் சிறந்தது.
---------------------------------------------------
சிம்பிள் டிப்ஸ்...!!
---------------------------------------------------
♨ ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் சேர்த்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
♨ தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
♨ அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக்கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.
♨ மாவு அரைக்கும்போது இரண்டு வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்தால் இட்லி பூ போல மிருதுவாக இருக்கும்.
♨ பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும்... அதற்கு லேசாகத் தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
---------------------------------------------------
எதை நோக்கி இருக்க வேண்டும்...!!
---------------------------------------------------
👉 நீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை...
👉 மெதுவாக நடந்தாலும் சரி...
👉 வேகமாக நடந்தாலும் சரி...
👉 நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும்...
👉 தன்னம்பிக்கை ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்...!
---------------------------------------------------
ரொம்ப கஷ்டமான, ஈசியான விஷயம் எது?
---------------------------------------------------
💰 உலகத்திலேயே ஈசியான விஷயம்...
பணம் சம்பாதிப்பதுதான்..!
💰 ரொம்ப கஷ்டமான விஷயம்...
பணம் சம்பாதிக்க அந்த ஈசியான வழியை கண்டுபிடிப்பதுதான்..!
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக