சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------
பாபு : சீக்கிரமே பணத்தை பெருக்க என்ன வழி?
கோபு : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்.
பாபு : 😆😆
-------------------------------------------------
மனைவி : என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணெய்யா இருக்கு?
கணவன் : ஆபிஸ்ல தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.
மனைவி : 😡😡
-------------------------------------------------
நெல்லிக்காய்...!!
-------------------------------------------------
🍈 நெல்லிக்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்படியே சாப்பிடலாம். மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றுகிறது.
🍈 நெல்லிக்காய் மருத்துவ குணங்கள் கொண்டது. நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, தலைக்கு, சருமத்துக்கு என நம்முடைய ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தையும், அழகையும் தருகிறது.
🍈 நெல்லிக்காய் ஜூஸில் பல நன்மைகள் உண்டு. நெல்லிக்காய் ஜூஸை அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.
🍈 நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, நியாசின், வைட்டமின் 'பி1", வைட்டமின் 'சி", கரிச்சத்து, சுண்ணாம்பு, தாதுப் பொருட்கள், கலோரிகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
-------------------------------------------------
சிரிக்க மட்டுமே...!!
-------------------------------------------------
🚀 ஒரு விஞ்ஞானி விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப தீர்மானித்தார். அதில் போகும் மனிதன் திரும்பி வருவான் என எந்தவித நம்பிக்கையும் இல்லாததால் நஷ்ட பரிகாரம் தருவதாக முன்னதாகவே தீர்மானம் செய்யப்பட்டது.
🚀 பலியாடு யாரென்று தீர்மானிக்க இன்டர்வியூ ஒன்று நடத்தப்பட்டது. முதலில் வந்த நபர் தன் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் தந்தால் நான் செல்கிறேன் என்று கூறினார்.
🚀 ஆனால் இரண்டாவதாக வந்த நபர் சொன்னார்... தனக்கு ஒரு லட்சம் தந்தாலே நான் செல்வதாக கூறினார்.
🚀 அடுத்ததாக மூன்றாம் நபர் வந்தார். அவர் தனக்கு மூன்று லட்சம் தந்தால், அதில் ஒரு லட்சம் விஞ்ஞானிக்கு தருகிறேன் என்று சொன்னதால்... விஞ்ஞானி சம்மதிச்சி, அவரை அனுப்புவது என்று தீர்மானம் செய்தார்.
🚀 ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு மூன்றாம் நபர் சாலையில் நடந்து செல்வதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் இண்டர்வியூ நடத்திய விஞ்ஞானி.
🚀 அப்போது அந்த மூன்றாம் நபர் இவ்வாறு சொன்னார்.. மூன்று லட்சத்துல ஒரு லட்சம் உங்களுக்கு தந்தேன். ஒரு லட்சம் கொடுத்து அந்த இரண்டாம் நபரை ராக்கெட்ல ஏத்தி விட்டேன். பாக்கி ஒரு லட்சம் நான் எடுத்துக்கிட்டேன் என்றார்.😎😎
-------------------------------------------------
விடுகதைகள் !!
-------------------------------------------------
1. அதிவேகக் குதிரை... ஆடியபடி செல்லும் குதிரை... போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும். அது என்ன?
2. எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது. அது என்ன?
விடைகள் :
🚂ரயில் பெட்டி
🍝இடியாப்பம்
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக