Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 மார்ச், 2022

2.5 மணி நேரம் செலவு செஞ்சா 100 கிமீ பயணிக்கலாம்... மிக குறைவான விலையில் Greta Glide விற்பனைக்கு அறிமுகம்!


2.5 மணி நேரம் சார்ஜ் செய்ய செலவு செஞ்சா போதும் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். சூப்பரான க்ரெட்டா க்ளைட் (Greta Glide) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் பற்றிய முக்கிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான க்ரெட்டா (Greta), இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் புதுமுக இ-ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 'க்ரெட்டா க்ளைட்' (Greta Glide) எனும் புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தையே இந்திய மின் வாகன சந்தையை அழகுப்படுத்தும் வகையில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 80 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 100 கிமீ ரேஞ்ஜ் வழங்கும் வகையில் லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் சில பேட்டரி பேக் தேர்வையும் நிறுவனம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இன்னும் என்ன மாதிரியான வசதிகள் எல்லாம் இவ்வாகனத்தில் கொடுக்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய விரிவான தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் விபரம்:

V2 48v-24Ah பேட்டரி பேக் 60 கிமீ ரேஞ்ஜ் திறன்,

V2 60v-24Ah பேட்டரி பேக் 60 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜ் திறன்,

V3 48v-30Ah 100கிமீ ரேஞ்ஜ் திறன்,

V2 60v-30Ah 100-க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜ் திறன்,

இதுமாதிரியான வெவ்வேறு திறன்கள் கொண்ட பேட்டரி பேக் தேர்விலேயே க்ரெட்டா க்ளைட் இ-ஸ்கூட்டர் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், மூன்று ஆண்டுகள் வாரண்டி பேட்டரிக்கு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மேலே பார்த்த ரேஞ்ஜ் திறனை பெற வேண்டும் எனில் 2.5 மணி நேரம் வரை வாகனம் சார்ஜ் செய்யப்பட வேண்டும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துகொள்ள இந்த நேரத்தையே க்ரெட்டா க்ளைட் எடுத்துக் கொள்ளும் என நிறுவனம் கூறுகின்றது.

அவ்வாறு 2.5 மணி நேரம் வரை வாகனத்தை சார்ஜ் செய்யும் போது நிறுவனம் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப ரேஞ்ஜ் திறனை இ-ஸ்கூட்டர்கள் வழங்கும். தற்போது நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் மக்களைக் கவரும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் 6 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரீ புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகைப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது ரூ. 2 ஆயிரம் முன் தொகையில் மின்சார ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே கூறியதைப் போல் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக க்ரெட்டா க்ளைட் காட்சியளிக்கின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டரில் சிறப்பம்சங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. டிஆஎர்எல், இபிஎஸ், ஏடிஏ சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட் ஷிஃப்ட் உள்ளிட்ட அம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ரிவர்ஸ் டிரைவ் மற்றும் மூன்று விதமான டிரைவிங் மோட்களும் க்ரெட்டா க்ளைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

கூடுதல் சிறப்பம்சங்களாக க்ரெட்டா க்ளைட் மின்சார வாகனத்தில் எல்இடி ரக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரை, சாவியில்லா நுழைவு, ஆன்டி தெஃப்ட் அலாரம், முன் பக்கத்தில் குளோவ் பாக்ஸ், லைட் டிசைனர் கன்சோல்கள் மற்றும் பெரிய லெக் ரூம் ஆகிய அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும் பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் கருப்பு நிற லெதர், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, 3.5 இன்ச் அளவுள்ள ட்யூப்லெஸ் டயர்கள், கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ட்யூவல் ஹைட்ராலிக் செல் ஷாக்கர் பின் பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்துடன், மிக சிறப்பான பிரேக்கிங் திறனுக்காக ட்யூவல் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் இரு முனைகளுக்கும் கொடுக்கப்பட்டள்ளது. மேலும், வாகனத் திருட்டு பயத்தைத் தவிர்க்கும் வகையில் ஃபைண்ட் மை வெயிக்கிள் மற்றும் அலாரம் உள்ளிட்ட வசதிகளும் க்ரெட்டா க்ளைட் வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக ஏழு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மஞ்சள், ஆரஞ்சு, கிரே, ஸ்கேர்லெட் சிவப்பு, ரோஸ் கோல்டு, கேண்டி வெள்ளை மற்றும் ஜெட் பிளாக் ஆகிய நிற தேர்வுகளில் இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக