Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 மார்ச், 2022

உங்கள் ஆபீஸ் டேபிளை ஸ்மார்ட்டாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை பாருங்க.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் இன்னும் சிலருக்குத் தொடருகிறது. இன்னும் சிலருக்கு வாரத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் மட்டும் அலுவலகத்திற்கு நேரில் சென்று பணிபுரியும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. 

நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்தாலும் சரி, அலுவலகம் சென்று பணிபுரிந்தாலும் சரி, எப்போதும் நீங்கள் ஸ்மார்ட்டாக வேலை செய்வது முக்கியம். உங்கள் வேலை பளுவைக் குறிப்பது முதல் உங்களுக்கு கூடுதல் கரங்களாகச் செயல்படக்கூடிய சில ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ்களை பற்றித் தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

உங்கள் ஆபீஸ் டேபிளை ஸ்மார்ட்டாக மாற்ற வேண்டுமா?

இதில் உள்ள சில ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ்கள் நிச்சயமாக உங்களுக்குப் பயனளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கேட்ஜெட்கள் உங்களையும், உங்கள் அலுவலக அறையையும் ஸ்மார்ட்டாக மாற்றிவிடும். தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. முந்தைய காலத்தில் ஸ்மார்ட் கேட்ஜெட்களுக்கென்று மக்கள் அதிக பணம் செலவு செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது நிலை அப்படி இல்லை, அனைத்து விலைப் புள்ளிகளிலும் உங்களுக்கு ஸ்மார்ட் கேட்ஜெட்கள் கிடைக்கிறது. உங்கள் பாக்கெட் பணத்திற்கு அதிக செலவு வைக்காத சிறந்த ஸ்மார்ட் கேட்ஜெட்கள் இதோ.

1. VoIP ஃபோன்
நீங்கள் இன்னும் VoIP ஃபோன் சிஸ்டத்திற்கு மாறவில்லை என்றால், இப்போது நேரம் வந்துவிட்டது. VoIP ஃபோன் சிஸ்டம்கள், நெக்ஸ்டிவாவில் உள்ளதைப் போன்றது. பாரம்பரிய லேண்ட்லைனுக்குப் பதிலாக இது ஸ்மார்ட்டாக செயல்படுகிறது. இவை லேண்ட்லைன்களை விட விலை குறைவு மற்றும் செயல்திறன் அதிகம் கொண்டது. பிற வணிக மென்பொருளுடன் ஒருங்கிணைப்பு போன்ற கூடுதல் அம்சங்களை இது வழங்குகின்றது. அலுவலக கேஜெட்களில் இது கட்சிதமாக பொருந்தும் மற்றும் உங்கள் பணியிடத்தை ஒருங்கிணைக்க இது மிக அவசியம்.


2. மல்டி டிவைஸ் கீபோர்டு
ப்ளூடூத் தொழில்நுட்பம் உண்மையில் ஸ்மார்ட் கேட்ஜெட்களை சிறப்பானதாக மாற்றியுள்ளது. இந்த மல்டி டிவைஸ் கீபோர்டு ப்ளூடூத் அம்சத்தில் இயங்குகிறது. இது உங்களின் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஐபாட், டெஸ்க்டாப் போன்ற சாதனங்களுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. உங்கள் மொபைல் அல்லது டேப்லெட் சாதனத்தை இணைக்க கீபோர்டில் போர்ட் உள்ளது. இதன் மூலம் உங்கள் சாதனத்தை இணைத்து நீங்கள் டைப் செய்யத் துவங்கலாம். இது விண்டோஸ், மேக், குரோம், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவற்றுடன் செயல்படுகிறது.

3. சார்ஜிங் ஸ்டேஷன்
உங்களிடம் பல டெக் சாதனங்கள் இருக்கிறது என்றால், கண்டிப்பாக இந்த சார்ஜிங் ஸ்டேஷன் உங்களிடம் இருப்பது சிறப்பானது. பல சாதனங்களை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சார்ஜ் செய்வது என்பது சிரமமானது. ஆனால், இந்த சார்ஜிங் ஸ்டேஷன் உங்களிடம் இருந்தால் உங்கள் சார்ஜிங் வேலை சுலபமாக முடிந்துவிடும். இது உங்களின் பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

4. சோலார் பவர் பேங்க்
பிஸியான வேலை நேரத்தில் உங்கள் செல்போன் பேட்டரி தீர்ந்து போவதை மறந்துவிடலாம். ஆனால், இப்படி ஒரு ஸ்மார்ட் கேட்ஜெட் உங்களிடம் இருந்தால், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த சோலார் பவர் பேங்க் உங்கள் ஜன்னலுக்கு வெளியே சூரிய ஒளியில் இருந்து ஆற்றலைப் பிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்களுடைய மொபைல் சாதனத்தை ரீசார்ஜ் செய்ய போதுமான ஆற்றலைச் சேமிக்கும் திறன் கொண்டது. இது 5.5 x 3 அங்குலம் அளவு கொண்டது.

5. வயர்லெஸ் சார்ஜிங் ட்ரே
உங்கள் ஸ்மார்ட் சாதனைகளில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கிறது என்றால், கட்டாயமாக இந்த வயர்லெஸ் சார்ஜிங் ட்ரே உங்களிடம் இருப்பது அவசியம். வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் எந்தவொரு சாதனமாக இருந்தாலும் அவற்றை நீங்கள் இது வைத்தால் மட்டும் போதும், தானாக சார்ஜ் ஆகிவிடும்.

6. யுஎஸ்பி காபி வார்மர்
அலுவலக நேரத்தில் காபி அல்லது டீ குடிக்கும் பிரியர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். USB காபி வார்மர் அவசியமான மேசை துணைப் பொருளாகும். இது உங்கள் கோப்பையைச் சரியான வெப்பநிலையில் வைத்திருக்கும். எப்போதும் சுட்டத் தயாரான காபி அல்லது தேநீரைப் பருகுவதற்கு உங்களிடம் இப்படி ஒரு ஸ்மார்ட் கேட்ஜெட் இருப்பது அவசியம்.

7. போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர்
நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலும் சரி வீட்டில் இருந்தாலும் சரி, உங்கள் இடத்தை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது சவாலாக இருக்கலாம். இந்த சிறிய கையடக்க ஏர் கண்டிஷனர் உங்கள் அலுவல அறையை முழுவதையும் உறைய வைக்காமல் நீங்கள் இருக்கும் இடத்தில் மட்டும் மிதமான குளிரை வழங்குகிறது. மின் கட்டணத்திற்காக அதிகப் பணம் செலவழிக்காமல் வசதியாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க இது உதவுகிறது. இந்த ஏர் கண்டிஷனர் ரீசார்ஜ் செய்யக்கூடியது, எனவே உங்களிடம் பிளக் இல்லாவிட்டாலும் இதைப் பயன்படுத்தலாம்.


8. என்கிரிப்ட் செய்யப்பட்ட HDDs மற்றும் SSDs
ஹார்டுவேர்-என்கிரிப்ட் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் டிரைவ்கள் (HDDs) மற்றும் சாலிட்-ஸ்டேட் டிரைவ்கள் (SSDs) அதிக திறன், பாதுகாப்பான போர்ட்டபிள் சேமிப்பகத்தைக் கொண்டுள்ளன. இந்த அலுவலக கேஜெட்டுகள், முக்கியத் தரவைச் சேகரித்து, அதை எடுத்துச் செல்ல வேண்டிய வணிகங்களுக்குச் சிறந்தவை. HDDs அதிக டேட்டாவைச் சேமிக்கலாம், ஆனால் SSDs தரவு அதிக நீடித்ததாகக் கருதப்படுகிறது. iStorage இன் HDDs மற்றும் SSDs பின்-அங்கீகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக