Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 மார்ச், 2022

ஆரம்பிக்கலாங்களா- திட்டம் எல்லாம் தயார்., சுதந்திர தினத்தன்று வருகிறதா 5ஜி: பிரதமர் மோடி சொன்னது என்ன?

சில வருடங்களாக இந்தியாவில் பேசு பொருளாக இருக்கும் விஷயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று 5ஜி சேவை. 5ஜி எப்போது வரும் என்ற கேள்வி பலரிடமும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் இறுதியாக 5ஜி சேவை அறிமுகத்துக்கான இணக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிக்கைகள் மற்றும் அரசின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவில் 76-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று 5ஜி வெளியீட்டை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான வரைபடம் தயாராகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சுயசார்பு நாடாக மாற வேண்டும்

இதனுடன் புவிசார் அமைப்புகள், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என மோடி குறிப்பிட்டார். 

இந்தியா சுயசார்பு நாடாக மாற வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார், இதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தாண்டு பட்ஜெட் 'ஆத்மநிர்பர் பாரத்' என்ற இலக்கை அடையும் வகையிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏல தேதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு (டிஓடி) பரிந்துரை செய்ய வேண்டும். இந்த தாமதம் காரணத்தால் நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

மார்ச் இறுதிக்குள் டிராய் பரிந்துரைகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராய் பரிந்துரைக்கு பிறகே அலைக்கற்றை ஏலத்துக்கான தேதி குறித்து முடிவு எடுக்கப்படும். இதை அனைத்தும் முறையாக கணிப்புப்படி நடக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 5ஜி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (விஐ) உள்ளிட்ட மொத்தம் 13 நிறுவனங்களை 5ஜி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

செயல்முறையை விரைவுபடுத்தும்படி கடிதம்

பரிந்துரை செயல்முறையை விரைவுபடுத்தும்படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தொலைத்தொடர்புத் துறை கடிதம் அனுப்பி இருக்கிறது. இதையடுத்து டிராய் தனது பரிந்துரைகளை மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்க இலக்கு வைத்திருக்கிறது. 

அதன்படி மார்ச் மாதத்தில் அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2022 மத்திய அரசு பட்ஜெட் தாக்கலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்துக்கான ஏலம் நடப்பு ஆண்டில் நடத்தப்படும் எனவும் 2023 ஆம் ஆண்டுக்குல் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்கச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதன்மூலம் அனிமேஷன், கிராஃபிக்ஸ் துறைகள் மேம்படுத்தப்படும் எனவும் இதனால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் 5ஜி தொழில்நுட்ப சோதனை நடைபெற்று வரும் இதற்கான ஏலம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

5ஜி விரைவில் வெளியாகும் என தகவல்

வேகமான இணைய சேவை என்பது தற்போது அவசியமாகிவிட்டது. 5ஜி விரைவில் வெளியாகும் என்ற செய்தி மட்டும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால் எப்போது என்ற பதில் தற்போதுவரை கிடைத்தப்பாடில்லை. இதற்கான காரணம் 5ஜி ஸ்பெக்ட்ரமிற்கான ஏலத் தாமதமே ஆகும். 

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தகவலின்படி, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 6ஜி நெட்வொர்க்குகள் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

 6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு முன்னதாகவே அறிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து 2023 அல்லது 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 6ஜி அறிமுகம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக