படம் இயக்குவதுடன் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறார் இரஞ்சித்.பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கி வரும் அவர், அதிகாரத்தின் வன்முறையையும் இந்தப் படங்களின் வாயிலாக கேள்வி எழுப்பி வருகிறார்.
அவர் இயக்கிய கபாலி, காலா படங்களை விடவும் அவர் தயாரித்த பரியேறும் பெருமாள், ரைட்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல பெயரை சம்பாதித்தன.
வரும் 18ஆம் தேதி அவர் தயாரித்திருக்கும் குதிரைவால் திரைப்படம் திரைக்கு வருகிறது. கலையரசன் இந்தப் படத்தில் மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை அடுத்து இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், பலூன் பிக்சர்ஸ் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கின்றனர். இதில் நடிக்க நடிகர்கள் தேவை என அறிவித்துள்ளார்
குழந்தை நட்சத்திரம் (பெண்) - 3 -11 வயது
குழந்தை நட்சத்திரம் (ஆண்) - 3-7 வயது
நடிகர் (ஆண்) - 15 - 45 வயது
நடிகர் (ஆண்) - 45 - 75 வயது
நடிகர் (பெண்) - 15 - 45 வயது
நடிகர் (பெண்) - 45 - 60 வயது
இந்த வயதுக்குட்பட்டவர்கள் நடிப்பு ஆர்வம் இருப்பின், புகைப்படம் மற்றும் வீடியோவுடன் தங்களின் முந்தைய அனுபவங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு castingforbr@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக