ஆடி 2 - வியாழக்கிழமை
🔆 திதி : இரவு 07.23 வரை துவாதசி பின்பு திரியோதசி.
🔆 நட்சத்திரம் : அதிகாலை 02.14 வரை அனுஷம் பின்பு கேட்டை.
🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 இன்று அதிகாலை 02.14 வரை அஸ்வினி பின்பு பரணி
பண்டிகை
🌷 வடமதுரை ஸ்ரீசௌந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு.
🌷 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காளிங்க நர்த்தனம் இரவு மோகன அவதாரம்.
🌷 சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
🌷 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை.
வழிபாடு
🙏 குருமார்களை வழிபட சுபம் ஏற்படும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 கரிநாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு சிறந்த நாள்.
🌟 வழக்களை பேசி தீர்க்க நல்ல நாள்.
🌟 குளம், கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌟 இயந்திர பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
மேஷ லக்னம் 11.58 PM முதல் 01.41 AM வரை
ரிஷப லக்னம் 01.42 AM முதல் 03.44 AM வரை
மிதுன லக்னம் 03.45 AM முதல் 05.55 AM வரை
கடக லக்னம் 05.56 AM முதல் 08.08 AM வரை
சிம்ம லக்னம் 08.09 AM முதல் 10.10 AM வரை
கன்னி லக்னம் 10.11 AM முதல் 12.10 PM வரை
துலாம் லக்னம் 12.11 PM முதல் 02.15 PM வரை
விருச்சிக லக்னம் 02.16 PM முதல் 04.27 PM வரை
தனுசு லக்னம் 04.28 PM முதல் 06.34 PM வரை
மகர லக்னம் 06.35 PM முதல் 08.29 PM வரை
கும்ப லக்னம் 08.30 PM முதல் 10.12 PM வரை
மீன லக்னம் 10.13 PM முதல் 11.53 PM வரை
_______________________________
இன்றைய ராசி பலன்கள்
_______________________________
மேஷம்
செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். எதிராக இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் திடீர் திருப்பம் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : விவேகத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : சிந்தித்து முடிவெடுக்கவும்.
---------------------------------------
ரிஷபம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு அதிகரிக்கும். எதிலும் தன்னபிக்கையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
கிருத்திகை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ரோகிணி : தெளிவுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
---------------------------------------
கடகம்
ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சிற்றின்ப செயல்களில் நாட்டம் ஏற்படும். குழந்தைகள் பற்றிய எண்ணம் மேம்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------
சிம்மம்
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் பிறக்கும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : சேமிப்புகள் குறையும்.
பூரம் : அலைச்சல் உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
கன்னி
வெளி வட்டாரங்களில் மதிப்பு மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அறப்பணிகள் குறித்த செயல்திட்டத்தை அமைப்பீர்கள். மாற்று மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : மதிப்புகள் மேம்படும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
துலாம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
சித்திரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
விசாகம் : செல்வாக்கு மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்
இணையம் சார்ந்த துறையில் புதுமையான சூழல் ஏற்படும். வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
விசாகம் : புதுமையான நாள்.
அனுஷம் : தடைகள் மறையும்.
கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
தனுசு
இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
மூலம் : தயக்கம் உண்டாகும்.
பூராடம் : மாற்றம் உண்டாகும்.
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். மூத்த உடன்பிறந்தவர்களின் வழியில் சுப காரியங்கள் கைகூடும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவோணம் : ஈடுபாடுகள் ஏற்படும்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கும்பம்
வியாபார பணிகளில் புதுமை ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறிகள் மறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். இறை சார்ந்த நம்பிக்கை மனதில் மேம்படும். கற்பித்தலில் சில மாற்றங்களை செய்வீர்கள். மருத்துவத் தொடர்பான துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
அவிட்டம் : புதுமை ஏற்படும்.
சதயம் : தெளிவு பிறக்கும்.
பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
மீனம்
உறவுகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். மனை விற்பனையில் ஏற்ற இறக்கமான சுழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
பூரட்டாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக