கப் போன்ற வடிவம் என்பதால் இவை கடினமாக இருக்குமோ என்று அச்சம் வேண்டாம். இவை மிருதுவாகவே இருக்கும். பெண்களி உடலமைப்புக்கேற்ப பிரத்யேகமான வடிவங்களில் இவை கிடைக்கிறது. இளம்பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள், அதிக உடல் எடை கொண்டிருக்கும் பெண்கள் என்று அவரவர் அளவுக்கேற்ப இவை கிடைக்கிறது. M- Medium S -Small L- Large, என கிடைக்கும் இந்த அளவுகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். நாப்கின் போன்று ஒரு முறை பயன்பாடு கிடையாது.
ஆரோக்கியமான பெண்கள் தொடர்ந்து 3 முதல் 10 ஆண்டுகள் வரை (தயாரிப்புக்கேற்ப) இதை பயன்படுத்தலாம். நீங்கள் ஆண்டுக்கு ஒரு முறை கூட மாற்றிகொள்ளலாம். இதன் விலை ரூ. 300 லிருந்தே கிடைக்கிறது.பெரிய மருத்தகங்களில் இவை எளிதாக கிடைக்கிறது.
எப்படி வைக்க வேண்டும்
ஆரம்பத்தில் பயன்படுத்தும் போது சற்று சிரமம் இருக்கும். முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு அதை பயன்படுத்துவது எளிதாக இருக்கும். வளையும் தன்மை கொண்ட மென்சுரல் கப்ப்பை சி போன்ற அமைப்பில் மடித்து ஃபோல்டு செய்தால் அது எஸ் வடிவில் மாறும். பிறகு ஒரு காலை ஸ்டூல் அல்லது கழிப்பறை மீது வைத்து உறுப்பின் வழியே இந்த கப்பின் மேல்புறம் உள்நோக்கி இருக்குமாறு செருகி வைக்க வேண்டும். அவை சரியாக உள்ளே சென்றால் கருப்பைக்குழாயை சுற்றி விரிந்து அதை சூழ்ந்து கொள்ளும்.
பிறகு கருப்பையிலிருந்து வரும் உதிரம் இந்த கப்பில் சேகரிக்க தொடங்கும். சரியாக பொருத்தவில்லை என்றால் உதிரம் லீக் ஆகும். அல்லது உங்களுக்கான அளவாக இருக்காது. அதனால் மென்சுரல் கப் பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும் தயங்கவேண்டாம். குறிப்பாக இளம்பெண்கள்.
உதிரபோக்கு
நாப்கின்கள் பயன்படுத்தும் போது 3 மணி நேரம் அல்லது குறைந்தது 4 மணி நேரத்தில் அதை மாற்றிவிட வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அப்படி மாற்ற முடிவதில்லை. இந்த நேரங்களில் பெண் உறுப்பில் அரிச்சல், நமைச்சல் உண்டாக வாய்ப்புண்டு. சிலருக்கு அதிகளவு இரத்த போக்கு இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு மாற்ற முடியாமல் போகும் போது இந்த அரிப்பு பிரச்சனை அதிகரிக்கும்.
பொதுவாக 10 முதல் 35 மி.லி வரை இருக்ககூடிய இரத்த போக்கு சிலருக்கு 70 மிலி வரையும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதிகப்படியான இரத்தபோக்கை நாப்கின்கள் உறிஞ்சும் என்றாலும் கூட இதனால் அரிப்பு பிரச்சனையும் இருக்கவே செய்யும். மென்சுரல் கப் பயன்படுத்தும் போது அரிப்பு பிரச்சனை எப்போதும் உண்டாகாது என்பதே ஆறுதல் தரும் விஷயம். கூடுதலாக இயற்கை உபாதை கழிக்கும் போதும் இதை அகற்ற வேண்டியதில்லை.
நாப்கின் சுத்தம் காட்டிலும் மென்சுரல் கப் சுத்தம் செய்வது எளிது. மென்சுரல் கப் காம்பு போன்ற பகுதியை வெளியே எடுத்தால் கப் காயமின்றி வெளியே வரும் அப்படியே எடுக்க வேண்டியதுதான். உதிரபோக்கு சேகரித்திருக்கும் மென்சுரல் கப்பை எடுத்து கழிப்பறையில் கொட்டி சுத்தமான நீரில் கழுவி மீண்டும் பொருத்தி கொள்ளலாம்.
அதிக உதிரபோக்கு இருந்தால் மிதமான வெந்நீரில் சோப்பு நீர் கலந்து கழுவி பிறகு பயன்படுத்த வேண்டும். பிறகு கைகளையும் சுத்தமாக கழுவ வேண்டும் அவ்வளவுதான். மாதவிடாய் காலத்துக்கு பிறகு கப்பை வெந்நீரில் போட்டு கழுவி உலர்த்தி அதற்குரிய பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும் அவ்வளவுதான். பகலில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறையும் இரவு நேரத்தில் 8 மணி நேரம் வரையும் தொடர்ந்து இதை வைத்திருக்கலாம்.
மென்சுரல் கப் பயன்படுத்தும் போது இவை தொற்றை உண்டாக்கிவிடுமா என்று அச்சம் வேண்டியதில்லை. இவை பாதுகாப்பான முறையில் சிலிக்கான். ரப்பர் லேடக்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது.முதலில் வைக்கும் போது கை நகங்கள் அந்த இடத்தில் பட்டுவிட்டால் காயம் உண்டாக வாய்ப்புண்டு. மென்சுரல் கப்பால் எந்தவிதமான காயமும் ஏற்படாது.
இளம்பெண்கள் மட்டும் பயன்படுத்தும் போது சற்று கவனமாக இருக்கவேண்டும். திருமணத்துக்கு பிறகு உறவினாலும், பிரசவத்துக்கு பிறகும் உறுப்புகள் தளர்ந்திருப்பதால் இதை எளிதாக பயன்படுத்த முடியும். உதிரப்போக்கு சமயங்களில் ஒருவித வாடையை உண்டாக்கி உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும். மென்சுரல் கப் பயன்பாட்டில் அந்த சங்கடங்களும் இல்லை.
நாப்கினுக்கு மாற்றாக இதை பயன்படுத்தும் போது செலவு அதிகமில்லை. இதையெல்லாம் தாண்டி மென்சுரல் கப் பயன்படுத்தும் போது உடலை வேகமாக அசைக்கவோ, ஓடவோ கூட செய்யலாம். பயன்படுத்தினால் உங்களுக்கும் புரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக